அமீரக செய்திகள்

சவூதியின் தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமீரகத்திற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையேயான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் மனதை ஈர்க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னணியில் அரபு மொழியில் பேசப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், ஷேக் சையத் சவுதியின் தலைமையுடன் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும், அது அவர்களின் பல ஆண்டு பயணத்தை காட்சிப்படுத்தியுள்ளது.

அரபு மொழியில் வெளியிடப்பட்ட வீடியோவில் “நாம் ஒன்றாக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜனாதிபதி சவுதி அரேபியாவை வாழ்த்துகிறார் என்ற கேப்ஷனும் வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில், “மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் சவூதி மக்களுக்கு 93வது தேசிய தின வாழ்த்துகள்! இந்த நாளை கொண்டாடும் போது, சவுதி அரேபியாவிற்கு அமீரகத்தில் உள்ள நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் எழுதப்பட்டிருந்தது.

அதேபோல், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் X தளத்தில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “சவூதி அரேபியா, அதன் மக்கள், அதன் மன்னர் மற்றும் அதன் பட்டத்து இளவரசர் ஆகியோருக்கு சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சவுதி மக்களின் நன்மை, பாதுகாப்பு மற்றும் புகழுக்காகவும், இரு நாடுகளின் மக்களிடையே சகோதரத்துவத்திற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வதாகவும் ஷேக் முகமது கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!