அமீரக செய்திகள்

அமீரகத்தில் நாளை நிகழவிருக்கும் வானியல் நிகழ்வு..!! வானியல் குழு வெளியிட்ட தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் சில மாதங்களுக்கு முன், புளூ மூன், சூப்பர் புளூ மூன் என வானியல் நிகழ்வுகளை எதிர்கொண்ட நிலையில் தற்பொழுது சந்திர கிரகணம் நிகழவிருப்பதாக அமீரகத்தின் வானியல் ஆய்வு குழு தெரிவித்துள்ளது. அதாவது நாளை (அக்டோபர் 28ஆம் தேதி, சனிக்கிழமை) இந்த சந்திர கிரகணம் நிகழவிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும்போது, பூமியின் நிழல் நிலவை மங்கச் செய்யும் நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். மேலும், சூரிய கிரகணங்களைப் போலல்லாமல் இந்த வானியல் நிகழ்வை புவியின் பல்வேறு பகுதியிலிருந்தும் பார்க்க முடியும். எனவே, இது வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று துபாய் வானியல் குழு (DAG) தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் எங்கிருந்து பார்ப்பது?

இந்த சந்திர கிரகணத்தை நீங்கள் அமீரகத்தில் எங்கிருந்தும் காணலாம். அத்துடன் நீங்கள் வானியல் நிகழ்வு குறித்து விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், DAG கல்வி அனுபவத்திற்காக அல் துரையா வானியல் மையத்தில் நடத்த உள்ள இரவு நிகழ்வில் பங்கேற்கலாம். பல நூறு பேருக்கு இடமளிக்கக்கூடிய திறந்த வெளியில் இந்நிகழ்வை அமைக்க உள்ளதாக DAG இன் பொது மேலாளர் ஷீராஸ் அஹ்மத் அவான் அவர்கள் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவான் தெரிவித்துள்ள தகவல்களின்படி, 10.01 மணிக்கு தொடங்கும் கிரகணம், அதிகாலை 2.26 மணிக்கு முடிவடையும். ஆகவே, ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை கிரகண நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் கண்ணிலேயே பார்க்கலாமா?

இந்நிகழ்வை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம் என்றும் சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை என்றும் கூறிய அவான், தொலைநோக்கியின் மூலம் பார்க்கும் போது தெளிவான காட்சிகளைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஏற்கனவே, கடந்த மே மாதம் 5 ஆம் தேதி தோன்றிய பெனும்பிரல் (penumbral) சந்திர கிரகணத்திற்குப் பிறகு இது ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் ஆகும். பெனும்ப்ரா எனப்படும் பூமியின் நிழலின் வெளிப்புறப்பகுதி வழியாக நிலவு கடந்து செல்வதே பெனும்பிரல் என அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்காகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!