அமீரக செய்திகள்

அமீரக அரசின் சூப்பர் திட்டம்.. ‘Low Skill’ தொழிலாளர்களுக்கும் இனி ஃப்ரீலான்ஸ் விசா.. அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்த திறன் முதல் அனைத்து திறன் கொண்ட தொழிலாளர்களும் ஃப்ரீலான்ஸ் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில், அனைவருக்கும் பொதுவான ஒரு புதிய நெகிழ்வான பணி அனுமதியை (flexible work permit) அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த புதன்கிழமை (மார்ச் 15) அன்று அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர் (Minister of Human Resources and Emiratisation) அப்துல் ரஹ்மான் பின் அப்துல்மானன் அல் அவார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய அனுமதி, அனைத்து திறன்களும் உள்ளவர்கள் நாட்டில் ஃப்ரீலான்ஸ் வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் என்றும், இது ஃப்ரீலான்ஸர்கள் நாட்டிற்குள் அல்லது உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் வேலை செய்ய உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின்போது பெருமளவில் உதவிய தொலைதூர வேலை, தொலைதூரக் கல்வி மற்றும் தொலைதூர சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றுக்கான தேசத்தின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘ரிமோட்’ என்ற புதிய திட்டம் குறித்து ஊடகங்களிடம் கலந்துரையாடிய போது, இந்த புதிய விசாக்கள் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், வெவ்வேறு திறன் நிலைகளில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஏற்றுக்கொள்ளும் புதிய ஃப்ரீலான்ஸ் கொள்கையை அறிமுகப்படுத்துவதில் அமைச்சகம் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது அதிக திறன் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, குறைந்த திறன் கொண்டவர்களும் கூட நெகிழ்வான பணி அனுமதிகளைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அத்தகைய பணியாளர்கள் அமீரக நாட்டின் சட்டத்திற்கு கீழ் இருக்கும் வரை அவர்கள் தொலைதூர வேலை மற்றும் மற்ற நிறுவனங்களுடனும் வேலை செய்யலாம் எனவும், ஆனால் அவர்கள் அமைச்சகத்தில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொழிலாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய ஃப்ரீலான்ஸ் வேலை கொள்கையானது அமீரக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் கூடுதலாக இருக்கும் என்று அல் அவார் தெளிவுபடுத்தியுள்ளார்.

வேலையில் உள்ள வேறுபாடுகள்:

இது குறித்து அமைச்சர் கூறியதாவது: “தனியார் துறையில் பணிபுரியும் ஒரு ஊழியர், அந்தந்த நிறுவனங்களின் பணித் தேவைகளின்படி ஒரு முதலாளி அல்லது பல முதலாளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இப்போது அரசு கொண்டுவர நினைக்கும் புதிய ஃப்ரீலான்ஸ் வேலை கொள்கையின் கீழ், நீங்கள் உங்களுக்காக வேலை செய்யலாம். அதாவது அரசின் சட்டத்திற்கு கீழ் ஃப்ரீலான்ஸராக பணிபுரிய விரும்பும் நபர், எந்த நேரத்திலும், அவர் நினைக்கும் போதெல்லாம் செய்யும் ஒரு தற்காலிக வேலை இது” என்று விளக்கியுள்ளார்.

மேலும், இந்த தொலைதூர பணிக் கொள்கையானது முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இருவருக்கும் பயனளிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாதிரியான தொலைதூர பணிகளில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை என்பதால், முதலாளிகளும் நிறுவனங்களும் இது தங்களுக்கு மிகவும் சிக்கனமானதாக இருக்கும் என்று சிந்திப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். .

எனவே, இதுபோன்ற ஃப்ரீலான்ஸ் ஊழியர்கள் உலகில் எங்கிருந்தும் வேலை செய்ய முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக திறமையாளர்களை ஈர்ப்பதற்காகவும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!