அமீரக செய்திகள்

ஈத் அல் அதா: துபாய், மெட்ரோ, டிராம், பேருந்து இயக்க நேரங்களில் மாற்றத்தை அறிவித்துள்ள RTA..!!

இன்னும் ஓரிரு நாட்களில் வரவிருக்கும் ஈத் அல் அதாவை முன்னிட்டு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA போக்குவரத்து சேவைகளில் நேர மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி விடுமுறையின் போது மெட்ரோ, டிராம் உள்ளிட்ட அனைத்து சேவைகளின் வணிக நேரங்களிலும் அறிவித்துள்ள மாற்றங்களை கீழே காணலாம். 

துபாய் மெட்ரோ மற்றும் டிராம்

ஜூன் 26-30 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் மெட்ரோ சேவை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும். அதேநேரம் ஜூலை 2 ஆம் தேதி, மெட்ரோ காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜூன் 26-30, மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில், டிராம் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும். ஜூலை 2 ஆம் தேதியில், டிராம் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

பேருந்து சேவை நேரம்

  • திங்கள் முதல் வியாழன் வரை: அதிகாலை 4.30 முதல் நள்ளிரவு 12.30 வரை.
  • வெள்ளிக்கிழமை: அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை
  • சனி-ஞாயிறு: காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை

கடல் போக்குவரத்து

வாட்டர் பஸ்

  • துபாய் மெரினா – மெரினா வாக்: மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12.11 மணி வரை
  • மெரினா ப்ரொமனேடு (Marina Promenade) – மெரினா மால்: மாலை 4.11 மணி முதல் இரவு 11.17 மணி வரை
  • மெரினா டெரஸ் (Marina terrace) – மெரினா வாக்: மாலை 4.08 மணி முதல் இரவு 11.16 மணி வரை

வாட்டர் டாக்ஸி

  • மெரினா மால் – புளூவாட்டர்ஸ்: மாலை 4 மணி முதல் இரவு 11.40 மணி வரை
  • தேவைக்கேற்ப (On-Demand): பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை (முன்பதிவு தேவை).

அப்ரா

  • துபாய் ஓல்ட் சூக் – பனியாஸ்: காலை 10 மணி முதல் இரவு 11.20 மணி வரை
  • அல் ஃபஹிதி – சப்கா: காலை 10 மணி முதல் இரவு 11:25 மணி வரை
  • அல் ஃபஹிதி – தேரா ஓல்டு சூக்: காலை 10 மணி முதல் இரவு 11.25 மணி வரை 
  • பனியாஸ் – சீஃப்: காலை 10 மணி முதல் இரவு 11.57 மணி வரை
  • துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி – துபாய் க்ரீக் ஹார்பர்: மாலை 4 மணி முதல் இரவு 11.20 மணி வரை
  • அல் ஜதஃப் – துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி: காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை
  • துபாய் ஓல்டு சூக் – அல் மர்ஃபா சூக்: மாலை 4.20 மணி முதல் இரவு 10.50 மணி வரை
  • தேரா ஓல்ட் சூக் – அல் மர்ஃபா சூக்: மாலை 4.05 மணி முதல் இரவு 10.35 மணி வரை
  • ஷேக் சயீத் சாலை நிலையத்திலிருந்து சுற்றுலா சேவை: மாலை 4 மணி முதல் இரவு 10.15 மணி வரை.

துபாய் ஃபெர்ரி

  • அல் குபைபா – துபாய் வாட்டர் கனல்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
  • துபாய் வாட்டர் கனல் – அல் குபைபா: பிற்பகல் 2.20 மணி முதல் இரவு 7.20 மணி வரை
  • துபாய் வாட்டர் கனல் – புளூவாட்டர்ஸ்: மதியம் 1.50 மணி மற்றும் மாலை 6.50 மணி
  • புளூவாட்டர்ஸ் – மெரினா மால்: மதியம் 2.50 மணி முதல் இரவு 7.50 மணி வரை
  • மெரினா மால் – ப்ளூவாட்டர்ஸ்: மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
  • புளூவாட்டர்ஸ் – துபாய் வாட்டர் கனல்: மதியம் 1.15 மணி முதல் மாலை 6.15 மணி வரை
  • மெரினா மாலில் இருந்து சுற்றுலா சேவை: காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

வாகன சோதனை, வாடிக்கையாளர் சேவை மையங்கள்

இந்த மையங்கள் ஈத் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் என்றும் ஜூன் 30 ஆம் தேதி வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை மீண்டும் தொடங்கும் என்றும், ஜூலை 1 ஆம் தேதி அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கிஃபாஃப் தவிர அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் ஜூன் 27 முதல் 30 வரை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. உம் ரமூல், தேரா, அல் பர்ஷா மற்றும் RTA தலைமை அலுவலகம் ஆகியவற்றில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மையங்கள் வழக்கம் போல் 24/7 என முழுநேரமும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!