அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்கு முதலாளி சம்பள உயர்வு கொடுக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா? உங்களுக்கான தெளிவான விளக்கம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளி, தனக்கு வரவேண்டிய வருடாந்திர உயர்வு வரவில்லை என்றால் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு. இதன்படி ஒரு குறிப்பிட்ட நபர் தனியார் துறையில் வேலை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நிறுவனம் வருடா வருடம் சம்பள உயர்வு அளித்து, இரு வருடங்களுக்குப் பிறகு பதவி உயர்வு அளிப்பதாகவும் உறுதியளித்திருந்தது. இந்நிலையில் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமா? என்ற கேள்விக்கு பதில் தான் இந்த பதிவு.

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெடரல் ஆணைச் சட்டம் எண். 33 இன் வேலைவாய்ப்பு உறவுகள் மற்றும் அமைச்சரவை தீர்மானத்தின் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு முதலாளி, பணியாளரின் வேலை ஒப்பந்தம், வேலைவாய்ப்புச் சட்டம் மற்றும் அதன் அடுத்தடுத்த அமைச்சகத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், வேலைவாய்ப்புச் சட்டம், 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண். 1 மற்றும் அதைத் தொடர்ந்து வரும் அமைச்சரவைத் தீர்மானங்களின்படி, வேலைவாய்ப்பு ஒப்பந்தத்திற்காக கூடுதல் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பிரிவானது முதலாளி மட்டும் தொழிலாளிக்கு இடையே உள்ள வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை பற்றி கூறுகின்றது.

எனினும் இந்த ஒப்பந்தங்கள் பணிபுரியும் காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வுகள் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, ஒரு பணியாளரின் எதிர்கால சம்பள உயர்வு தொடர்பான எந்த உத்தரவாதமும் உங்கள் வேலை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்காது. சம்பள உயர்வினை குறிப்பிட்டு ஒப்பந்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது முதலாளிக்கு கட்டாயம் இல்லை.

எனினும், உங்கள் வேலை ஒப்பந்தத்தில் இரண்டு வருட சேவையை முடித்தவுடன் உங்கள் சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்கு நீங்கள் தகுதியுடையவர். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் பணியமர்த்துபவர் தற்போது உங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என்றால், நீங்கள் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் (MoHRE) வேலைவாய்ப்பு புகாரைத் தாக்கல் செய்யலாம்.

அதன் பிறகு MoHRE இல் இந்த விவகாரம் இணக்கமாகத் தீர்க்கப்படாவிட்டால், நீங்கள் நீதிமன்றத்தை அணுகுவதை பரிசீலிக்கலாம். எனவே, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தால் தவிர முதலாளி சம்பள உயர்வு வழங்கவில்லை என்றால் நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!