அமீரக செய்திகள்

விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட அமீரகத்தின் கண்கவர் புகைப்படங்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு இடங்களின் புகைப்படங்களை நாம் கண்டிருக்கிறோம். பல இடங்களுக்கு நாமே நேரடியாக சென்று புகைப்படங்கள் எடுத்திருப்போம்.

அதில் சற்று மாறுபாடாக விண்வெளியில் இருந்து அமீரகத்தை பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.

ஜூலை 2019 ல், ஸ்பேஸ் கார்கோ ஃப்ரைட்டர் துபாயை சுற்றி வரும் போது சர்வதேச விண்வெளி மையத்தின் (International Space Station) மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்

மார்ச் 15, 2010 அன்று விண்வெளி வீரர் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள சர் பனியாஸ் (Sir Baniyas) என்ற தீவின் மேற்பரப்புகளின் மாறுபட்ட தன்மையை விளக்குகிறது.

துபாயினை, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிப்ரவரி 4, 2021 அன்று 261 மைல் மேலே சுற்றி வந்தபோது எடுத்த புகைப்படம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விண்வெளியில் இறங்கிய முதல் விண்வெளி வீரர் ஹஸ்ஸா அல் மன்சூரி ISS விண்வெளி நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை எடுத்த புகைப்படம்.

 

அல் அய்னில் இருக்கக்கூடிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மசூதியின் அழகிய புகைப்படம்.

மே 2019 ல் எடுக்கப்பட்ட பாம் ஜூமேரா, பாம் ஜபெல் அலி, வேர்ல்ட் ஐலேண்டின் புகைப்படம்

கலீஃபாசாட் (KhalifaSat) எடுத்த இந்த புகைப்படம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயர்ந்த மலையான ஜபெல் ஜெய்ஸைக் குறிக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் உள்ளது.

விளக்குகளால் ஒளிரும் துபாயினை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எக்ஸ்பெடிஷன் 30 (expedition 30) குழுவினர் எடுத்துள்ளனர்.

அபுதாபிக்கு அருகிலுள்ள ஒரு உற்பத்தித் தளத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 262 மைல் மேலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4, 2020 அன்று, முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் (mohamed bin rashid space center), ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படமான (high-resolution satellite image) “Mosaic” ஐப் பயன்படுத்தி அபுதாபி மற்றும் துபாயின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை கலீஃபாசாட் (khalifasat) எடுத்துள்ளது.

ISS-ல் இருந்து எடுக்கப்பட்ட அபுதாபியின் புகைப்படம்

கலீஃபாசாட் எடுத்த இந்த புகைப்படம், அல் குத்ராவில் உள்ள ஏரிகளில் ஒன்றான துபாயின் லவ் லேக்கை (love lake) காட்டுகிறது.

 

அபுதாபியில் உள்ள அல் ஜுபைல் தீவின் அழகிய புகைப்படம். இந்த தீவில் இயற்கை அழகை கண்டு களிப்பதற்கு மாங்க்ரோவ் பார்க் உள்ளது.

2018 ஆம் ஆண்டில் கலீஃபாசாட் செயற்கைக்கோளால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பாம் ஜுமேராவின் தோற்றம். கலீபாசாட் துபாயைக் கடந்து சென்றபோது இந்த படம் எடுக்கப்பட்டது. இதுவே கலீபாசாட் எடுத்த முதல் அதிகாரப்பூர்வ புகைப்படமாகும்.

ஒரே நேரத்தில் 25,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் வழிபடுவதற்கான வசதியைக் கொண்டிருக்கும் ஷார்ஜா மசூதியின் அழகிய புகைப்படம்

விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட அபுதாபியின் புகைப்படம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!