அமீரக செய்திகள்

அமீரகத்தில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெறும் நேரங்கள் வெளியீடு..!!

அமீரக குடியிருப்பாளர்கள் இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாளை கொண்டாட இன்னும் ஓரிரு நாட்களே உள்ளது. மேலும் இது பிறை பார்ப்பதன் அடிப்படையில் ஏப்ரல் 9 ம் தேதி அல்லது ஏப்ரல் 10 ம் தேதியாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அமீரகத்தில் நாளை திங்கள்கிழமை மாலை பிறை பார்க்கும் கமிட்டி கூடி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நோன்பு பெருநாளின் போது அமீரகம் முழுவதும் சூரிய உதயத்திற்கு பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெறும். அத்துடன் அனைத்து எமிரேட்களிலும் உள்ள மசூதிகள் மற்றும் முஸல்லாஹ் என்று அழைக்கப்படும் திறந்தவெளி வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்படும் இந்த சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கமாகும்.

அதன்படி, அமீரகத்தில் உள்ள அனைத்து எமிரேட்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறும் தோராயமான நேரங்களின் பட்டியல் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாய்:

துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறையின்படி, மசூதிகள் மற்றும் முஸல்லாக்களில் நோன்பு பெருநாள் தொழுகை காலை 6.18 மணிக்கு நடைபெறும்.

ஷார்ஜா:

ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் துறையால் வெளியிடப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டியின் படி, மசூதிகள் மற்றும் முஸல்லாக்கள் காலை 6.17 மணிக்கு தொழுகையை நடத்தும்.

அபுதாபி:

பொதுவாக அபுதாபியில் தொழுகை நேரங்கள் துபாய்க்குப் பிறகு இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் பின்பாக இருக்கும். எனினும், ஷேக் சையத் கிராண்ட் மசூதி மையம் வெளியிட்டுள்ள இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, பெருநாள் தொழுகை அபுதாபி நகரில் காலை 6.22 மணிக்கும், அல் ஐனில் காலை 6.15 மணிக்கும் நடைபெறும்.

அஜ்மான் மற்றும் உம் அல் குவைன்:

பொதுவாக, இந்த எமிரேட்ஸில் உள்ள நேரங்கள் ஷார்ஜாவைப் போலவே இருக்கும். எனவே இவ்விரு எமிரேட்களில் நோன்பு பெருநாள் தொழுகை காலை 6.17 மணிக்கு நடைபெறும்.

ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா:

இந்த எமிரேட்களின் நேரம் பொதுவாக ஷார்ஜாவை விட இரண்டு நிமிடங்கள் முன்பாக இருக்கும். எனவே இந்த இரு எமிரேட்களில் சிறப்பு தொழுகை நடைபெறும் நேரம் காலை 6.15 மணியாக இருக்கும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!