வளைகுடா செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கையில் புது சாதனையை பதிவு செய்த ஓமானின் விமான நிலையம்!

ஓமானில் உள்ள சலாலா விமான நிலையத்தில் 2023 ஆம் ஆண்டின் கரீஃப் தோஃபர் சீசனிற்காக வருகை புரிந்த பயணிகள் பற்றிய புள்ளி விவரங்களானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சலாலா விமான நிலையம் இந்த ஆண்டு கரீஃப் தோஃபர் சீசனில் விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது பயணிகளின் எண்ணிக்கையில் கொரோனா நோய் தொற்றுக்கு முன்பு இருந்த வருகையை எட்டியுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டின் கரீஃப் தோஃபர் சீசனில் விமானங்களின் எண்ணிக்கையில் 29 சதவீதமும், பயணிகளின் எண்ணிக்கையில் 34.4 சதவீதமும் வளர்ச்சியினை எட்டி உள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு முன்பிருந்த வருடங்களை கணக்கில் கொள்ளும் பொழுது விமானங்களின் எண்ணிக்கையானது ஜூலை 2019 ஆம் ஆண்டில் 1,362 ஆகவும், ஆகஸ்ட் 2019ல் 1,620ஆகவும் இருந்தது. பின், ஜூலை 2022 இல் 1,125 ஆகவும் பதிவாகி இருந்த நிலையில் இந்த வருடம் ஜூலையில் 1,424 விமானங்களை விமான நிலையம் பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் 1,744 விமானங்களை பதிவு செய்துள்ளது. இதேபோன்று ஆகஸ்ட் 2022ல் 1,330 என்று பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும் பொழுது 2022 ஆம் ஆண்டில் 351,109 பயணிகள் வருகை புரிந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களையும் கணக்கில் கொள்ளும் பொழுது பயணிகளின் எண்ணிக்கையானது 34 சதவீதம் அதிகரித்து 471,911 என பதிவாகியுள்ளது என புள்ளிவிபரங்களில் தெரிய வந்துள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!