Uncategorized

UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 3, 2020) : பாதிக்கப்பட்டோர் 240 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 1,264 பேர்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3,2020) புதிதாக 240 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமீரகத்தில் இதுவே ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமீரகத்தில் இன்று ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் ஆசியாவை சேர்ந்த 52 வயதான நபராவார். இவர் ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிப்படைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நாளில் மட்டும் 12 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் சிலர் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் இதிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் பொதுமக்கள் அனைவரும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!