அமீரக செய்திகள்

வீடியோ: துபாயில் ஷாப்பிங் மால் போன்று பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையங்கள்..!!

போக்குவரத்துத் துறையில் பல்வேறு மாற்றங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் துபாய் தற்பொழுது தனது போக்குவரத்து சேவையில் மூன்று புதிய பேருந்து நிலையங்களை இணைத்துள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அல் ஜாஃபிலியா, அல் குசைஸ் மற்றும் தேராவில் முறையே அல் ஜாஃபிலியா, எடிசலாட் மற்றும் யூனியன் ஆகிய மூன்று பொது பேருந்து நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைவதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த புதிய பொது பேருந்து நிலையங்கள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு நீடித்த தன்மை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

அல் ஜாஃபிலியா நிலையம்

இது ஒரு பஸ் டெர்மினல் மற்றும் பல நிலை கட்டிடத்தை (தரை தளம், 2 மாடிகள் மற்றும் பஸ் நிறுத்தும் இடம்) கொண்டுள்ளது. இந்த கட்டிடம் 19,000 சதுர மீட்டர் பரப்பளவில் 484 சதுர மீட்டர் அலுவலகப் பகுதியையும், காத்திருக்கும் பயணிகளுக்காக 595 சதுர மீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது

இந்த நிலையம் உலக வர்த்தக மையம், துபாய் ஃபிரேம், பொது வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகம் (GDRFA) மற்றும் ஜபீல் பூங்காவிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது.

503 வாகனங்கள் மற்றும் 30 பைக்குகளுக்கு பார்க்கிங் இடமும், கூடுதலாக, பேருந்துகளுக்கு ஆறு இடங்கள் உள்ளன. இந்த நிலையம் 7,000 பயணிகளை எதிர்கொள்ள முடியும்.

இந்த நிலையம் ஒரு நாளைக்கு 4,500 பயணிகளால் பயன்படுத்தப்படும் என்று RTA எதிர்பார்க்கிறது, மேலும் எக்ஸ்போ 2020 இன் போது இந்த எண்ணிக்கை 6,000 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையம் தற்பொழுது ஐந்து பேருந்து வழித்தடங்களுக்கு சேவையை இயக்குகிறது. எக்ஸ்போ ஆரபித்த பிறகு ஆறாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

யூனியன் நிலையம்

தேராவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் ஒரு நவீன பொறியியல் வடிவமைப்பு கொண்டுள்ளது. இது 2,180 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

இந்த நிலையம் யூனியன் மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அங்கு துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைன் ஒன்றிணைகின்றன. நைஃப், அல் ராஸ் மற்றும் பாரம்பரிய மொத்த சந்தைகளை உள்ளடக்கிய தேராவின் வணிக பகுதிக்குள் இந்த நிலையம் ஒரு பிரதான இடத்தைக் கொண்டுள்ளது.

அலுவலக இடம், வாடிக்கையாளர்கள் சேவை பகுதி, 14 பஸ் இடங்கள், 46 பார்க்கிங் இடங்கள் மற்றும் 20 பைக்குகளுக்கான இடங்கள் ஆகியவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையத்தில் 7,500 பயணிகள் தங்க முடியும்.

தினசரி பயனர்களின் எண்ணிக்கை 5,400 பயணிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது எக்ஸ்போவின் போது 7,150 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையம் தற்பொழுது ஏழு பேருந்து வழித்தடங்களுக்கு சேவையை இயக்குகிறது. எக்ஸ்போ ஆரபித்த பிறகு எட்டாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எடிசலாட் நிலையம்

இந்த பேருந்து நிலையம் துபாய் மெட்ரோவின் கிரீன் லைனில் (green line) உள்ள எடிசலாட் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு தளங்களைக் ( ground and mezzanine floors) கொண்டுள்ளது.

மேலும், இது 708 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக இடம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இந்த நிலையத்தில் 24 பஸ், 50 பைக் நிறுத்தும் இடங்களும், இரவு முழுவதும் 20 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதியையும் கொண்டுள்ளது.

இந்த நிலையத்தில் 4,500 பயணிகள் தங்க முடியும், எக்ஸ்போவின் போது தினசரி பயனர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையம் தற்பொழுது ஏழு பேருந்து வழித்தடங்களுக்கு சேவையை இயக்குகிறது. எக்ஸ்போ ஆரபித்த பிறகு எட்டாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!