வளைகுடா செய்திகள்

உலகிலேயே அதிக வெப்பநிலையை பதிவு செய்த நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த வளைகுடா நாடு..!! 51 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்பநிலை..!!

உலகெங்கிலுமே வெப்பமானது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் எப்போதுமே கோடைகாலங்களில் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் வளைகுடா நாடுகளும் தற்சமயம் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் உலகளவில் அதிக வெப்பநிலை பதிவாகிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தை குவைத் பிடித்துள்ளதாக குவைத்தைச் சேர்ந்த அல்-கபாஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

El Dorado Weather இணையதளத்தின்படி, குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்றும் குவைத் நகரம் மற்றும் ஜஹ்ராவில் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது என்றும் வானிலை ஆய்வாளர் ஜமால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எனவே ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாசம் மிகவும் வெப்பமாக உள்ளதை இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றது. அதேபோல் ஈரப்பதமானது 5 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகமாக இருக்கும் என்றும், வார இறுதியில் கடுமையான வெப்பம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து வானவியல் அறிஞர்கள் கூறும் பொழுது, குவைத் நாட்டில் அதிக வெப்பம் நிலவுவதோடு அல்லாமல் தூசிகாற்றும் அதிகமாக வீசும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பகல் நேரங்களில் வெப்பநிலை 51 டிகிரி வரை இருக்கும் என்றும், பிற்பகலுக்கு மேல் 49 டிகிரி வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சனிக்கிழமையன்று, அதிகபட்ச வெப்பம் 50-48 டிகிரி அளவிலும், இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 32-35 டிகிரி அளவிலும் இருக்கும் வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மின் சுமை குறியீடு இரண்டாவது நாளாக அதிகபட்ச வரம்பை எட்டியதாகவும் தெரிவிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!