அமீரக செய்திகள்

UAE: வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பினால் 1 கிலோ தங்கம், ஒரு வருடத்திற்கு இலவச எரிபொருள் பெறும் வாய்ப்பு… Adnoc அறிவித்துள்ள அதிரடி ப்ரொமோஷன்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் நிறுவனமான Adnoc, அதன் வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டும் வகையில், கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து பல்வேறு ப்ரோமோஷன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, Adnoc பெட்ரோல் பம்பில் எரிபொருள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பணம், பாயிண்டுகள் அல்லது இலவச எரிபொருளுக்கான கூப்பன்கள் போன்ற பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திங்களன்று இந்த வார ப்ரோமோஷனின் வெற்றியாளர்களை Adnoc அறிவித்தது. அவர்களில் ஐசா ஆலியம்மஹி என்ற குடியிருப்பாளர் 50,000 திர்ஹம் பரிசுத் தொகையையும், ராண்டோனோ கொதமத்தி என்பவர் ஒரு வருடத்திற்கு இலவச எரிபொருளையும் மற்றும் கலீஃபா அல்சியோடி என்பவர் 5 மில்லியன் பாயிண்டுகளையும் பரிசுகளாக வென்றுள்ளனர்.

Adnoc-ன் ப்ரோமோஷன்:

Adnoc சர்வீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் பரிசுகள் தினசரி வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு வாடிக்கையாளர்கள் Adnoc Oasis கன்வீனியன்ஸ் ஸ்டோர், கார் கழுவுதல், லூப் மாற்றம், LPG ஆன்லைன் அல்லது EV சார்ஜிங் போன்றவற்றில் 20 திர்ஹம்ஸ் அல்லது எரிபொருள் வாங்குதலில் 60 திர்ஹம்ஸ் செலவழித்திருக்க வேண்டும்.

மேலும், இந்த வாடிக்கையாளர்கள் வாராந்திர பரிசுகளான 50,000 ரொக்கம், ஒரு வருடத்திற்கு இலவச எரிபொருள், 5 மில்லியன் ரிவார்ட் பாயின்ட் மற்றும் கிராண்ட் பரிசான 1 கிலோ தங்கம் போன்ற ஆடம்பர பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்று ப்ரோமோஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தாண்டின் செப்டம்பர் 25 ஆம் தேதி வெற்றியாளர்களுக்கு 1 கிலோ தங்கம் பெரும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அசத்தலான ப்ரோமோஷன் செப்டம்பர் 24, 2023 வரை நடைபெறும்.

எப்படி பங்கேற்பது?

Adnoc நிறுவனத்தின் அதிரடி ப்ரோமோஷனில் பங்கேற்க வேண்டுமெனில், உங்களிடம் அமீரக மொபைல் எண் மற்றும் எமிரேட்ஸ் ஐடி இருக்கவேண்டும். இவற்றுடன் நீங்கள் Adnoc Rewards உறுப்பினராக இருந்தால் மட்டுமே இந்த ப்ரொமோஷனில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, பங்கேற்க விரும்புபவர்கள், Adnoc ஸ்மார்ட் ஆப் அல்லது நேரடியாக சர்வீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யலாம். ஒவ்வொரு பர்ச்சேஸ்-க்கும் முன்பு, பங்கேற்க உங்கள் எமிரேட்ஸ் ஐடி அல்லது ரிவார்ட்ஸ் மெம்பர்ஷிப் QR குறியீட்டைக் காட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதியாக, அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஸ்மார்ட் ஆப் -இல் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!