அமீரக செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி துபாயில் நடக்கவுள்ள மாணவர்களுக்கான மாபெரும் கலை விழா.. உங்கள் பிள்ளைகளின் திறனை வெளிகாட்ட அரிய வாயப்பு..!!

உங்கள் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து, கண்டறிந்த திறனை, திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு மேம்படுத்துவதுடன், மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக, தற்போது துபாயில் வரும் ஏப்ரல் 20, Learner Circle’s Dubai Utsav ‘24 கலை விழா பல முக்கிய நபர்களின் முன்னிலையில் போட்டியினை நடத்த தயாராகியுள்ளது.

இதில் பங்குபெறும் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு கூப்பன் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது வரும் ஏப்ரல் 20ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடத்தில் நடத்தப்பட உள்ளது.

  • நாள்: ஏப்ரல் 20, 2024
  • நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
  • இடம்: Dewvale பள்ளி, 318th Rd,- Al Quoz 4, துபாய்.


போ
ட்டி விபரங்கள்

  • Free Drawing Competition : நடுவர்களால் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கான on-the spot ஓவியப் போட்டி. இதில் பங்கு பெறுவது முற்றிலும் இலவசம். பள்ளி செல்லும் சிறார்கள் இதில் பங்கு பெறலாம். https://bit.ly/3PUPIks
  • Little Authors, Big Dreams: சிறுவர்கள் எழுதிய கதைகள் சிறுகதை தொகுப்புகளாகவும், பட புத்தக தொகுப்புகளாகவும் வெளியிடப்படும்.
  • Talent Hunt: இசை, நடனம், மிமிக்ரி, நடிப்பு என உங்கள் தனித்துவமான திறமையை மேடையில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.
  • Quiz Trivia: 9-15 வயதினருக்கான வினாடி வினா போட்டி.பார்வையாளர்கள் பங்குபெற audience quiz உள்ளது. https://bit.ly/3PUPIks
  • Art Exhibition : உங்கள் கலைப்படைப்புகளை சமர்ப்பிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் Dubai Utsav இல் காட்சி படுத்தப்படும்.
  • Design and Dazzle Contest: டிசைனர் கவுன் அணிந்து ஸ்டைலாக runway இல் நடக்கும் போட்டி.
  • Education excellence Awards: கல்வியாளர்கள் மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி.

இவற்றுடன் மெஹந்தி டிசைன், ஃபேஸ் பெயின்டிங், உணவுக் கூடங்கள் போன்றவையும் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கவும் மகிழ்ச்சியடையவும் அமைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உங்கள் குழந்தைகள் பங்குபெற விருப்பமா?

உங்கள் குழந்தைகளிடம் உள்ள சிறப்பான திறமைகளை வெளிப்படுத்த இந்நிகழ்ச்சியானது ஒரு அருமையான வாய்ப்பாகும். எனவே உடனே பதிவுசெய்து, உங்கள் பிள்ளைகளின் தன்னம்பிக்கை, பேச்சாற்றல், மற்றும் கலைத்திறனை வளர்க்கவும், பள்ளி தேர்வுகளையும், எதிர்காலத்தையும் துணிச்சலோடு எதிர்கொள்ள உறுதுணை செய்திடுங்கள்.

இந்த கலை விழாவில் கலந்துகொள்ள https://bit.ly/3PsNB7d என்ற லிங்கில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://www.learnercircle.in/utsav-dubai லிங்கிற்கு சென்று பார்வையிடலாம் .

Learner Circle நடத்திய போட்டிகளும் விழாக்களும்

இளம் வயதினரிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்க்க லர்னர் சர்க்கிள் பல்வேறு போட்டிகளையும் விழாக்களையும் நடத்திவருகிறது. கடநம 2020 வருடம் அக்டோபர் மாதம் நடந்த QPL 1.0, இந்திய குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் 1,250 குழந்தைகளுக்கு  மேல் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து 2021 வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட்ட QPL 2.0, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் இந்தியர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. மேலும் 2024 வருடம், ஜனவரி 6 இல், மலேசியாவில் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு சலங்கை பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 20 ம் தேதி, இக்குழுவில் மூன்று வருடங்களுக்கு மேல் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்ட துபாய் மாணவர்கள், முதல் முறையாக மேடையில் நடனமாடும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பான கேள்விகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ளலாம். http://wa.link/dgh2fu.

Related Articles

Back to top button
error: Content is protected !!