அமீரக செய்திகள்

அமீரகத்தில் முடிவுக்கு வந்துவிட்டதா கோடை வெப்பம்..? தேசிய வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..?

அமீரகத்தில் வசிப்பவர்கள் இரவில் ஈரப்பதமான வானிலையையும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதையும் எதிர்பார்க்கலாம் என்றும் அதன் காரணமாக வரும் நாட்களில் மூடுபனி உருவாகும் வாய்ப்புகள் உள்ளன என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அமீரகத்தில் வியாழன் முதல் ஞாயிறு வரை சில கடலோரப் பகுதிகளில் காலையில் ஈரப்பதமான வானிலை நிழவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. அந்த நாட்களில், தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் மணிக்கு 10-25 கி.மீ வேகத்தில் தூசி நிறைந்த காற்று வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன் படி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, நாட்டின் சில பகுதிகளில் காலையில் மூடுபனி உருவாகும் என்றும் வரும் நாட்களில் அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் NCM கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!