அமீரக செய்திகள்

UAE: புதிய இன்டர்சிட்டி பேருந்து சேவையை இன்று முதல் துவங்கிய எமிரேட்..

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது ஷார்ஜா எமிரேட்டில் இன்டர்சிட்டி பேருந்து சேவையில் புதிய வழித்தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது இன்று (புதன்கிழமை) முதல் செயல்படத் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இனி ஷார்ஜாவில் இருந்து அபுதாபியில் இருக்கும் அல் அய்னிற்கு நேரடி பேருந்து சேவை வழங்கப்படுவதற்கென புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பஸ் நெட்வொர்க்கின் கவரேஜை விரிவுபடுத்துவதையும், எமிரேட்டில் வெகுஜன போக்குவரத்து வழிமுறைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

புதிதாக துவங்கப்பட்டுள்ள ரூட் 811ன் பாதை அல் ஜுபைல் பேருந்து நிலையத்தில் தொடங்கி மலேஹா பகுதி, அல் மடம் மற்றும் ஷுவைப் வழியாக அல் அய்ன் பேருந்து நிலையத்தில் முடிவடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஷார்ஜாவில் இருந்து அல் அய்னிற்கோ அல்லது அல் அய்னில் இருந்து நேரடியாக ஷார்ஜாவிற்கோ பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய பேருந்து சேவையானது பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!