அமீரக செய்திகள்

அமீரகத்தில் நிலவும் குளிர்: “World’s Coolest Winter” பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கும் துபாய் ஆட்சியாளர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போதைய காலகட்டத்தில் வெப்பநிலை குறைந்து, குளிர ஆரம்பித்துள்ளதால் இந்த குளிர்காலத்தை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அமீரகத்தின் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், உலகின் குளிர்ச்சியான குளிர்கால பிரச்சாரத்தின் (World’s Coolest Winter campaign) மூன்றாவது சீசனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளார்.

அதன்கீழ் இந்த ஆண்டு பிரச்சாரமானது “எங்கள் பாரம்பரியம்” எனும் எமிராட்டிகளின் மதிப்புகளை பரப்புவதில் கவனம் செலுத்தும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜ்மானின் அல் ஜோரா நேச்சர் ரிசர்வ் பகுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியபோது, ​​இந்த வெளியீட்டை அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “இந்த பிரச்சாரத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம், அதன் கிராமங்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளின் அழகை காட்சிப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின் புதிய சீசனின் தொடக்கப் புள்ளியாக அஜ்மானை ஷேக் முகமது அவர்கள் முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் இது பற்றி தெரிவிக்கையில் “எனது சகோதரர் ஷேக் ஹுமைத் பின் ரஷீத்தின் வழிகாட்டுதலின் கீழ் அஜ்மான் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற மாற்றத்தைக் கண்டது. ஷேக் அம்மார் பின் ஹுமைத் மற்றும் அவரது சகோதரர்களின் அர்ப்பணிப்பு குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

பிரச்சாரத்தின் தற்போதைய சீசனானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்நாட்டு சுற்றுலாவை ஆதரிப்பதோடு, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள் மற்றும் நாட்டின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு, கலாச்சார மற்றும் இயற்கை அடையாளங்களை எடுத்துக்காட்டும் என கூறப்படுகின்றது.

ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, வருடாந்திர குளிர்கால பிரச்சாரத்தின் விளைவாக 2021 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா வீதமானது முதல் சீசனை ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகரித்து 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எட்டியது என்றும் இரண்டாவது சீசனில், பிரச்சாரம் ஒரு மாதத்தில் 1.5 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாயை ஈட்டியது என்றும் கூறப்பட்டுள்ளது,

 

Related Articles

Back to top button
error: Content is protected !!