அமீரக செய்திகள்

துபாயின் முக்கிய சாலையில் புதிதாக இரண்டு நடைபாலங்களை திறந்துள்ள RTA..!! லிஃப்ட், கண்காணிப்பு அமைப்பு, பிரத்யேக சைக்கிள் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எமிரேட்டின் பிரதான சாலைகளில் ஒன்றான ராஸ் அல் கோர் சாலையில் இரண்டு புதிய நடைப்பாலங்களை திறந்துள்ளது.

கவர்ச்சிகரமான வடிவமைப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இரண்டு பாலங்களிலும், ஹைடெக் எலக்ட்ரோ மெக்கானிக்கல் அமைப்புகள், லிஃப்ட், அலாரங்கள், தீயணைப்பு அமைப்பு, ரிமோட் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பிரத்யேக சைக்கிள் ரேக்குகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல் பாலம் க்ரீக் ஹார்பர் மற்றும் ராஸ் அல் கோர் இண்டஸ்ட்ரியல் ஏரியாவை இணைக்கிறது. 6.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் முதல் பிரிவில் 174 மீட்டர் நீளமும் 3.4 மீட்டர் அகலமும், இரண்டாவது பிரிவில் 4.1 மீட்டர் அகலமும் உள்ளது. கூடுதலாக, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 1.9 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு 120 மீட்டர் நீளமான சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராஸ் அல் கோர் சாலையில், நேரடியாக மர்ஹாபா மால் மற்றும் நாத் அல் ஹமாரில் உள்ள வாஸல் காம்ப்ளக்ஸில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது பாலம், 101 மீட்டர் நீளம், 3.4 மீட்டர் அகலம் கொண்டது. முதல் பாலத்தைப் போலவே, இதிலும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 1.9 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு 120 மீட்டர் நீளமான சரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக RTAவின் போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் CEO அப்துல்லா அல் அலி என்பவர் பேசுகையில், சாலைப் பயனாளர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு RTAவிற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், RTA 2023 ஆம் ஆண்டுக்கு முன்னதாக RTA அறிவித்தபடி, ஏழு தரைப்பாலங்களை அமைப்பதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இரண்டு பாலங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

பெரும்பாலும் பாதாசாரிகள் கடக்கும் இடங்கள், போக்குவரத்து ஓட்டம், தெருவின் இருபுறமும் மக்கள் நடமாட்டம் மற்றும் அருகில் உள்ள பாதசாரிகள் கடக்கும் தூரம், பொது பேருந்து நிறுத்தங்கள், சந்தைகள் உள்ள இடங்கள் போன்ற பல முக்கிய இடங்களை கருத்தில் கொண்டு நடைபாலங்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!