Uncategorized

அபுதாபியின் பொது இடங்கள் முழுவதும் இலவச wifi ஐ அறிமுகப்படுத்திய முனிசிபாலிட்டி..!! குடியிருப்பாளர்களின் வசதிக்காக நடவடிக்கை..!!

அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) பேருந்துகள், கடற்கரைகள் மற்றும் பொதுப் பூங்காக்கள் உட்பட அபுதாபி எமிரேட் முழுவதும் இலவச வைஃபை கவரேஜை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமீரக சேவை வழங்குநர்களுடன் இணைந்து DMT ஆல் வழங்கப்படும், இந்த முயற்சி பொதுப் பூங்காக்களை உள்ளடக்கியது (அபுதாபியில் 19 பார்க், அல் அய்னில் 11 பார்க் மற்றும் அல் தஃப்ரா பிராந்தியத்தில் 14 பார்க்) மேலும் விரைவில் அபுதாபி கார்னிச் கடற்கரை மற்றும் அல் பதீன் கடற்கரையில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து DMT இன் தலைவர் முகமது அலி அல் ஷோராஃபா கூறுகையில் “இந்த சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லா இடங்களிலும் அனைவருக்கும் இணைப்பை உறுதிசெய்கிறோம். IMD ஸ்மார்ட் சிட்டி இன்டெக்ஸ் 2023 இல் வரிசைபடுத்தப்பட்ட முதல் 141 நகரங்களில் 13 வது இடத்தில் உள்ள அபுதாபியின் உலகளாவிய தரவரிசை புதுமை, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை, ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டிற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் எங்கள் உறுதிப்பாட்டையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!