அமீரக செய்திகள்

UAE: அபுதாபி அறிவித்துள்ள 5 மற்றும் 10 ஆண்டு விசா பெற தகுதிகள் என்னென்ன..?? முழு தகவல்கள் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் திறமையான தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு 5 மற்றும் 10 ஆண்டு குடியிருப்பு விசாக்களை வழங்கும் ஒரு திட்டத்தை அபுதாபி அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும் “அபுதாபியில் த்ரைவ் (Thrive in Abu Dhabi)” என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அமீரக குடியுரிமையையும் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடியுரிமை பெறுவதற்குண்டான தகுதிகளை அபுதாபி அரசு அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கோல்டன் விசா – த்ரைவ் இன் அபுதாபி ( Golden Visa – Thrive in Abu Dhabi)” திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு துறைக்கும் அதன் சொந்த அளவுகோல்கள் உள்ளன என்று இந்த முயற்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழுவிபரங்களையும் கீழே காண்போம்.

>> முதலீட்டாளர்கள் (Investors)…

இந்த பிரிவின் கீழ் இரண்டு துணைப்பிரிவுகள் உள்ளன. அவை முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் என்பதாகும்.

1) 10 ஆண்டு முதலீட்டாளர் விசா (10-year Investor visa)

முதலீட்டாளர்கள் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அபுதாபியில் 10 ஆண்டு விசா பெறுவதற்கு தகுதியுடையவர்கள்:

– அபுதாபிக்குள் ஒரு முதலீட்டு நிதி அல்லது வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம் மூலதன வைப்பு நிதி வைத்திருப்பவர்கள்.

– அபுதாபியில் குறைந்தது 2 மில்லியன் திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட நிறுவனத்தை நிறுவியது அல்லது 2 மில்லியன் திர்ஹம் நிதி பங்களிப்புடன் நிறுவப்பட்ட ஏற்கனவே உள்ள அல்லது புதிய நிறுவனத்தில் இருக்கும் பங்குதாரர்கள்.

– மத்திய அரசாங்க வரியாக ஆண்டுக்கு 250,000 திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை தவறாமல் செலுத்தும் ஒரு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பவர்கள்.

– ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250,000 திர்ஹம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை மத்திய அரசாங்க வரியாக செலுத்தும் ஒரு நிறுவனத்தில் ஒரு பங்காளராக இருப்பவர்கள்.

– முதலீட்டாளர்கள் விசா வழங்கப்பட்ட பின்னர் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அபுதாபியில் முதலீடுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

2) 5 ஆண்டு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் விசா (5-year real estate investor visa)

ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அபுதாபியில் 5 ஆண்டு விசா பெற தகுதியுடையவர்கள்:

– மொத்த மதிப்பில் 2 மில்லியன் திர்ஹம்ஸிற்கு குறையாத ஒரு சொத்தில் முதலீடு செய்பவர்கள்.

– சொத்து அல்லது சொத்தின் போர்ட்ஃபோலியோ அடமானம் வைத்திருந்தால், விசாவிற்கு தகுதிபெற குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள பணத்தை டவுன் பேமெண்ட்டாக செலுத்த வேண்டும்.

– விசா வழங்கப்பட்ட பின்னர் தங்களின் முதலீட்டை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

>> தொழில்முனைவோர் (Entrepreneur)…

தொழில்முனைவோர் கீழே உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் 5 ஆண்டு விசாவிற்கு தகுதியுடையவர்கள்:

– குறைந்தபட்சம் 500,000 திர்ஹம் மூலதனத்துடன் ஏற்கனவே இருக்கும் திட்டம்.

– அபுதாபியில் அங்கீகாரம் பெற்ற வணிக இன்குபேட்டரின் ஒப்புதல்.

>> மாணவர் (Student)…

இந்த பிரிவின் கீழ் இரண்டு துணைப்பிரிவுகள் உள்ளன. அவைகள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகள்.

1) உயர்நிலைப் பள்ளி மாணவர் (High School Student)

நம்பிக்கைக்குரிய விஞ்ஞான திறனுடன் சிறந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு அபுதாபி 5 ஆண்டு விசாவை வழங்குகிறது:

– அபுதாபியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் இருந்து உயர் தரங்களைப் பெற்ற மாணவர்.

– அபுதாபி கல்வி அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்.

2) பல்கலைக்கழக பட்டதாரி (University Graduate)

அபுதாபி மிகவும் தகுதியான பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு 10 ஆண்டு விசாவை வழங்குகிறது:

– அபுதாபியில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

– பட்டம் பெற்றவர் தனது ஒட்டுமொத்த GPA மதிப்பெண்ணில் குறைந்தது 3.8 அளவை பெற்றிருக்க வேண்டும்.

>> சிறப்பு திறமை (Special Talent)…

அபுதாபி ஒன்பது பிரிவுகளில் திறமையான நபர்களுக்கு 10 ஆண்டு கோல்டன் விசாவை வழங்குகிறது.

1) மருத்துவர்கள் (Doctors)

– அபுதாபி சுகாதாரத் துறையின் ஆலோசகர் அல்லது சிறப்பு மருத்துவராகப் பயிற்சி பெற உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

– மருத்துவ துறை தொடர்பான Tier 1 இல் தரவரிசை பெற்றிருக்க வேண்டும் அல்லது சுகாதார சேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் ஆலோசகராக உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

– 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலோசகர் அல்லது சிறப்பு மருத்துவராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

– ஒரு அரிய சிறப்புடன் சுகாதார சேவையை வழங்குபவர். (அதே துறையில் பயிற்சி பெறும் மொத்த நிபுணர்களின் எண்ணிக்கை உரிமம் பெற்ற மருத்துவர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% ஐ தாண்டக்கூடாது)

கூடுதலாக, மருத்துவர்கள் பின்வரும் அளவுகோல்களில் ஒன்றை கட்டாயம் பூர்த்தி செய்து அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்:

– சம்பந்தப்பட்ட எந்தவொரு அரசாங்க அதிகாரிகளாலும் ஒரு சிறப்பு நிபுணராக வழங்கப்பட்ட சான்றிதழ்.

– பயனுள்ள மருத்துவ ஆராய்ச்சி குழுவில் உறுப்பினராக இருத்தல்.

– ஒரு சர்வதேச அறிவியல் இதழில் அது தொடர்புடைய கட்டுரைகளை வெளியிட்டிருத்தல்.

– அபுதாபி சுகாதாரத் துறையின் செயலில் உள்ள உறுப்பினர் அல்லது சர்வதேச மருத்துவக் கல்வித் திட்டத்தின் செயலில் உறுப்பினராக இருத்தல்.

2) விஞ்ஞானிகள் (Scientists)

– எமிரேட்ஸ் விஞ்ஞானிகள் கவுன்சிலிடமிருந்து பரிந்துரை பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் வேறுபாட்டிற்கான முகமது பின் ரஷீத் பதக்கத்தைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

3) படைப்புகள் (கலை மற்றும் கலாச்சாரம்) – Creatives (Art & Culture)

– அபுதாபியில் உள்ள சிறப்பு அரசு கலாச்சார நிறுவனங்களில் ஒன்றின் பரிந்துரை பெற்றிருக்க வேண்டும்

4) கண்டுபிடிப்பாளர்கள் (Innovators)

– பொருளாதார அமைச்சகத்தின் பரிந்துரையைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அபுதாபி பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கும் காப்புரிமையை வைத்திருக்க வேண்டும்

5) நிர்வாக இயக்குநர்கள் (Executive Directors)

– இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

– குறைந்தபட்சம் 5 வருட பணி அனுபவம்.

– மாதத்திற்கு 50,000 திர்ஹம் குறைந்தபட்ச சம்பளம்.

– அபுதாபியில் செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம்.

6) கல்வியாளர்கள் (முன்னுரிமை துறைகளில்) – Educators (In priority field)

– நாட்டிற்கான முன்னுரிமையின் அரிய துறைகளில் அல்லது சிறப்புகளில் ஒன்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும், மேலும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும்.

7) விளையாட்டு (Sports)

– பொது விளையாட்டு ஆணையம் அல்லது அபுதாபி விளையாட்டு கவுன்சிலிடமிருந்து பரிந்துரை பெற்றிருக்க வேண்டும். அவைகள் பின்வரும் வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:

– சிறந்த விளையாட்டு திறமை

– தடகள சிறப்பை அடைந்திருத்தல்

– சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள், குழுக்கள் அல்லது அமைப்புகளில் தலைமைப் பதவியை வகித்தல்

– விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்

8) PhD வைத்திருப்பவர்கள் (PhD Holders)

– கல்வி அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்ற அபுதாபிக்கான முன்னுரிமைத் துறைகளின் ஒன்றில் PhD பெற்றிருக்க வேண்டும்

9) பொறியாளர்கள் (Engineers)

கல்வி அமைச்சகத்தால் அங்கீகாரம் பெற்ற இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பின்வரும் துறைகளில் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும், மேலும் அபுதாபியில் இந்தத் துறையிலும் பணியாற்ற வேண்டும்:

– தொற்றுநோய் மற்றும் வைராலஜி (Epidemiology and Virology)

– செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

– பெரிய தரவு (Big Data)

– கணினி பொறியியல் (Computer Engineering)

– மின் பொறியியல் (Electrical Engineering)

– மென்பொருள் பொறியியல் (Software Engineering)

– எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் (Electronics Engineering)

– மரபணு பொறியியல் (Genetic Engineering)

– பயோடெக்னாலஜி பொறியியல் (Biotechnology Engineering)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!