அமீரக செய்திகள்

UAE: துபாயில் போக்குவரத்தை எளிதாக்க புதிய பாலம்.. இந்தாண்டு இறுதியில் திறக்கப்படுவதாக RTA அறிவிப்பு..!

துபாய் அல் மனாமா பகுதியில் போக்குவரத்தை எளிதாக்கும் சாலை திட்டம் தற்போது 67 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் சமீபத்தில் திறக்கப்பட்ட துபாய்-அல் ஐன் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அல் மெய்டன் தெருவை அல் மனாமா தெருவுடன் ஒவ்வொரு திசையிலும் நான்கு பாதைகள் கொண்ட பாலம் மூலம் இணைக்கும் புதிய போக்குவரத்து வழித்தடமும் கட்டுமானத்தில் அடங்கும்.

ஒரு மணி நேரத்திற்கு 8,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது. இந்த திட்டத்தில் துபாய்-அல் ஐன் சாலையுடன் இணைக்க ஸ்லிப் லேன்கள் அமைக்கும் பணியும் அடங்கும். அல் மனாமா பகுதியில் உள்ள ஏடன் தெரு, சனா தெரு மற்றும் நாட் அல் ஹமர் தெருவுடன் முதல் மூன்று மேற்பரப்பு சந்திப்புகளாக மாற்றுவதன் மூலம் தற்போதைய சாலையின் திறன் அதிகரிப்படும். நாட் அல் ஹமர் தெருவைச் சந்திக்கும் வரை ஒவ்வொரு திசையிலும் போக்குவரத்துப் பாதைகளின் எண்ணிக்கையை நான்காக அதிகரிப்பதுடன், ஏடன் தெருவின் சில போக்குவரத்துப் பாதைகளையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மேம்பாடுகளால் ஒரு மணி நேரத்திற்கு 2,000 வாகனங்கள் அதிகரிக்கும், மேலும் தாமதங்களைக் குறைத்து சந்திப்புகளில் போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. RTA சமீபத்தில் அல் மனாமா தெரு மற்றும் சனா தெருவின் மேம்படுத்தப்பட்ட சந்திப்பை திறது வைத்தது. மீதமுள்ள சந்திப்புகள் மற்றும் பிரதான வீதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!