அமீரக செய்திகள்

ஷார்ஜாவின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு..!! லிஃப்ட்டுகளுக்குள் சிக்கித் தவித்த குடியிருப்பாளர்கள்!!

ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நண்பகல் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அல் மஜாஸ், அல் தவுன், அல் நஹ்தா பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

அல் மஜாஸில் வசிக்கும் மாலிக் என்பவர், “எங்கள் பகுதியில் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் இல்லை” என்று கூறியுள்ளார். முதலில் இது குடியிருப்பில் தொழில்நுட்பக் கோளாறு என்று நினைத்ததாகவும், பின்னர் முழுப் பகுதியிலும் மின்சாரம் இல்லை என்பதை அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல, அல் வாதா ஸ்ட்ரீட்டில் வசிக்கும் ஜமீர் அவான் என்பவர் கூறுகையில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மின்சாரம் இல்லாததைக் கண்டு வியப்படைந்ததாகவும், கடைக்காரர்களிடம் சோதனை செய்தபோது, ​​எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சமூக ஊடகத்தில் ஷார்ஜாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு எரிவாயு ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த பதிவில், ஷார்ஜா அரசாங்க ஊடகத்துறை “அல் சஜா பகுதியில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு நகரின் சில பகுதிகளில் மின் தடையை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வெப்பமான காலநிலை காரணமாக, அருகிலுள்ளத வணிக வளாகங்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஜார்ஜ் என்ற குடியிருப்பாளர், அவரது அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஜாஹியா மாலுக்குச் சென்று உணவு வாங்கியதாகக் கூறியுள்ளார்.

ஆனால், உணவகத்தின் அடுப்பு செயலிழந்ததால் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், மேலும் அவரது பணத்தைத் திருப்பித் தர அவர்களின் பணப் பதிவேட்டை (cash register) இயக்க முடியவில்லை என்றும் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அல் மஜாஸ் 3 இல் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளரான வாலித் கான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு மின்சாரம் இல்லாததால் வீடு திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் அவரது அறை நண்பர்கள் மின்வெட்டு குறித்து தெரிவித்தததால், அப்துல் காதர் அல் பன்னா மசூதியிலேயே தங்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, காசிமியா பகுதியில் தங்கியிருக்கும் புஷ்ரா என்பவர், மசூதியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய போது, மின்சாரமின்றி லிஃப்ட் செயலிழந்ததால், படிக்கட்டுகளில் ஏறி அவரது பிளாட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது; “அதிர்ஷ்டவசமாக, நான் நான்காவது மாடியில் இருக்கிறேன், அதனால் இது மோசமாக இல்லை, ஆனால் உயர்ந்த மாடிகளில் வசிப்பவர்கள் ஏற முடியாமல் தரையிலேயே காத்து இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மின்வெட்டின் போது, சில குடியிருப்பாளர்கள் பல நிமிடங்கள் லிப்ட்டுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அல் மஜாஸ் 3 மற்றும் அல் மஜாஸ் 2 ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களில் மின்சாரம் மீண்டும் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மஜாஸ் 3 இல் உள்ள சிட்டி சென்டர் கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளரின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட மின்சாரம், பிற்பகல் 2.05 மணிக்கு மீண்டும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வோரு மின்வெட்டு உள்ள பகுதிகளுக்கும் மின்சாரம் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!