அமீரக செய்திகள்

அமீரகத்தில் வாகனங்களில் குழந்தைகளை முன் இருக்கையில் அமர வைத்தால் என்ன தண்டனை தெரியுமா..?

அமீரகத்தில் வாகனங்களில் பயணிக்கும்போது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க, 10 வயது வரை குழந்தைகளுக்கான கார் இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அபுதாபி காவல்துறை குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஓடும் வாகனத்தின் முன் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுவதில்லை என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும் அபுதாபி காவல்துறை அதன் பாதுகாப்பான கோடைகால பிரச்சாரத்தின் மூலம் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

அபுதாபி போலீஸ் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது தாஹி அல்-ஹமிரி, குழந்தை கார் இருக்கைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் வாகனங்களில் ஒட்டுமொத்த குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விளக்கினார்.

குழந்தைகளுக்கான கார் இருக்கைகள் மூலம் பெரிய ஆபத்துக்களை தடுக்கலாம். குழந்தைகள் குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன், வாகனத்தில் நிறுவப்பட்ட சீட் பெல்ட்களை பொருத்தி குழந்தைகளை அமர வைக்க வேண்டும்.

தனிப்பட்ட தேவைகள்

பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கார் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தாமல், ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கைகள் உயரம் மற்றும் எடைக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அல் ஹமிரி கூறினார்.

வாகன ஓட்டிகளுக்கு முன் இருக்கையில் குழந்தைகளை மடியில் அமர வைக்க வேண்டாம் என்றும் இந்த நடைமுறை குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

தண்டனைகள்

ஓடும் வாகனத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறினால் அபராதமும் விதிக்கப்படும். ஓடும் வாகனத்தில் குழந்தைகளை சரியாகப் பாதுகாக்கத் தவறினால், 400 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 டிராஃபிக் பிளாக் மார்க்குகள் விதிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!