அமீரக செய்திகள்

கடந்த ‘ஆயிரம் வருடங்களில்’ ஜூலை 2023 தான் வெப்பமான மாதம்… நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு!!

கடந்த ஆயிரம் வருடங்களில் ஜூலை 2023 ஆம் மாதம் தான் உலகின் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று நாசாவின் சிறந்த காலநிலை நிபுணர் கவின் ஷ்மித் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

உலகின் தினசரி வெப்பத்தை கணக்கிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மைனே பல்கலைக்கழகம் இணைந்து தொழில்நுட்ப கருவிகளின் மூலம் வெப்பநிலை பதிவு செய்து வருகின்றன. மேலும் பல்வேறு செயற்கைக்கோள்களும் வெப்பநிலை பற்றிய தரவுகளை தொடர்ந்து கொடுத்த வண்ணம் உள்ளன.

இவை எல்லாவற்றையும் கணக்கிடும் பொழுது உலகில் இதுவரை இல்லாத மாற்றங்களை இந்த மாதத்தில் உணர்வதாக விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அத்துடன் வெப்பநிலையானது இந்த இடத்தில் இவ்வளவு தான் இருக்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கு புவியின் இடது பக்கம் வலது பக்கம் மற்றும் மையத்தில் வெப்ப அலைகள் மாறி மாறி பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளார். மேலும் ஐரோப்பாவிலும், சீனாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் காணும் வெப்ப அலைகளானது கணிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி உள்ளன என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இதற்கு ஒட்டுமொத்த உலகமும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது காரணம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கடல்களிலும் கூட வெப்ப நிலை முன்பு இல்லாத அளவிற்கு அதிகமாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களிலும் இந்த நிலை தொடரும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2023 ஜூலை மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக கணிக்கப்பட்டாலும், இனி வரும் ஆண்டுகளில் இந்த சாதனையையும் முறியடிக்கும் அளவிற்கு வெப்பநிலை உயரும் என்று விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மேலும், இயற்கை வளங்களை பாதுகாத்து, புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கக் கூடியது இதற்கு ஒரே தீர்வு என்று விஞ்ஞானிகள் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறி வருகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!