அமீரக செய்திகள்

வெகு விமரிசையாக தனது 39-வது பிறந்த நாளைக் கொண்டாடும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான்..!!

துபாயின் பட்டத்து இளவரசரும் அனைவராலும் ஃபஸ்ஸா என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று தனது 39 பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சாகசத்திற்கு பெயர் போன ஷேக் ஹம்தான் தற்பொழுது வரையிலும் பல்வேறு சாகசங்களைப் புரிந்துள்ளார். ஸ்கை டைவிங், புர்ஜ் கலிஃபா உச்சிக்கு செல்லுதல் மற்றும் மிக சமீபத்தில், உலகின் உயரமான ஃபெர்ரி வீலான 760 அடி உயர அயன் துபாய் பாட் ஒன்றின் மேல் அமர்ந்திருத்தல் போன்ற அவரின் சாகசப் பயணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

சாகசம் மட்டுமன்றி விலங்குகள் மீதான அவரது அன்பு அவரின் மனிதாபிமான குணத்தை  காட்டுகிறது.

அமீரகத்தின் வளர்ச்சியிலும், அதற்கான திட்டங்களிலும் தன்னை முழுமையாக புகுத்திக் கொள்ளும் அதே சமயத்தில் சிறந்த செயல் புரிவோரை பாராட்டுவதற்கும் அவர் தவறுவதில்லை. சமீபத்தில் இறந்து போன மகனின் உடலுறுப்புகளை தானம் செய்த இந்திய பெற்றோருக்கு அவர் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபஸ்ஸா பெயர் காரணம்

அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளரும் தனது தந்தையுமான ஷேக் முகமது பின் ரஷீதைப் போலவே, ஷேக் ஹம்தான் கவிதைகளை எழுதுகிறார், அதை அவர் சில நேரங்களில் ஆன்லைனில் பகிர்ந்து கொள்கிறார். அதையொட்டியே அவருக்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. Fazza என்றால் “மற்றவர்களின் உதவி மற்றும் ஆதரவிற்கு விரைவுபடுத்தும் நபர்” என பொருளாகும்.

இது போன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அவருக்கு பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!