அமீரக செய்திகள்

இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்களா? அடையாளத்தை மறைக்க கைரேகை அறுவை சிகிச்சை… கடுமையான தண்டனை அளித்த குவைத் அரசு!

குவைத் நாட்டில் தங்களது உண்மையான அடையாளங்களை மறைக்கும் நோக்கில், கைரேகைகளை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்கள் அதிகாரிகளால் அடையாளம் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள், பயோமெட்ரிக் ஸ்கேனிங் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கைரேகையை மாற்ற அறுவை சிகிச்சை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, சட்டவிரோதமாக குவைத்துக்குள் நுழைந்ததற்காக இந்த இரண்டு ஆசிய நாட்டவர்களும் குற்றப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட இருவரும் ஏற்கெனவே குவைத் அரசால் விதிமீறலில் ஈடுபட்டதற்காக நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். எனவே தங்களின் கைரேகைகளை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டு மீண்டும் குவைத்திற்குள் நுழைய முற்பட்டபோது அதகாரிகளிடம் பிடிபட்டுள்ளனர்.

குவைத்தில் மைதான் ஹவாலி புலனாய்வு அலுவலகத்தின் மூலம் செயல்படும் குற்றப் புலனாய்வு பொது இயக்குநரகம், இரண்டு ஆசிய நாட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்ததை அடுத்து, குவைத் அரசு இந்த புலனாய்வு அலுவலகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்களும் மேம்பட்ட பயோமெட்ரிக் கைரேகை பகுப்பாய்வு மூலம் ஆராயப்பட்டதில் இந்த நபர்களின் அசல் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்கு விரோதமாக அறுவை சிகிச்சை செய்து கைரேகைகளை மாற்றியது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

மேலும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அவர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது போன்ற குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குவைத் அரசு எச்சரித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!