அமீரக செய்திகள்

ராஸ் அல் கைமாவில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்டமான ஐலேண்ட்.. 5.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் ‘வின் அல் மர்ஜான் ஐலேண்ட்’ என்ற பெயரில் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான புதிய பிரம்மாண்டமான ரிசார்ட் ஒன்றை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட வின் ரிசார்ட்ஸ் நிறுவனம் கட்டவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தினர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கு மற்றும் கேமிங் வசதிகள் உட்பட ஒரு பிரீமியம் சொகுசு அனுபவத்தைக் கொண்டிருக்கும் இந்த ஐலேண்ட், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்படும் என்றும் வின் ரிசார்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதிய ரிஸார்ட்டை கட்டவிருக்கும் வின் ரிசார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஸ் அல் கைமாவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட மர்ஜான் ஐலேண்டில் கிட்டத்தட்ட 250,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ரிசார்ட் கட்டப்படும். மேலும், அந்த ஐலேண்டில், குறைந்தபட்சம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடம்பரமான அறைகள் மற்றும் வில்லாக்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக பலவிதமான பொழுதுபோக்கு விருப்பங்கள், கேமிங் ஏரியா, 24 மணி நேர டைனிங் வசதி மற்றும் லாஞ்ச் (lounge) அனுபவங்கள், புதுமையான ஸ்பா அனுபவங்கள், ஒரு உயர்நிலை ஷாப்பிங் மையம், ஒரு அதிநவீன நிகழ்வுகள் மையம், ஒரு தியேட்டர் ஆகியவற்றையும் பார்வையாளர்கள் இங்கு எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இரண்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலெக் இன்ஜினியரிங் அண்ட் கான்ட்ராக்டிங் LLC (Alec Engineering and Contracting LLC – Alec) கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தையும், Bauer International FZE, பைலிங் மற்றும் செயல்படுத்தும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளன.

இது குறித்து வின் ரிசார்ட்ஸ்-இன் CEO கிரெய்க் பில்லிங்ஸ் கூறுகையில், வின் அல் மர்ஜான் ஐலேண்டின் தனித்துவமான இடத்தை கருத்தில் கொண்டு, மிக நுணுக்கமாக இந்த ரிஸார்ட்டின் வடிவமைப்பை நிறைவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா சந்தைகளில் ஒன்றான ராஸ் அல் கைமாவில் அமைக்கப்படும் இந்த ரிசார்ட் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் 2030க்குள் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஸ் அல் கைமாவின் சுற்றுலா துறைக்கு ஒரு கேம்-சேஞ்சர் என்று அழைக்கப்படும் இந்த ரிசார்ட், எமிரேட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான மதிப்பை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான ஹோட்டல் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டர்களில் ஒருவரான Wynn Resorts என்ற அமெரிக்க நிறுவனம், முதல்முறையாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியத்தில் ரிஸார்ட்டை கட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!