அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் IIT கல்வி நிலையம்..!!

இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரியான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) அதன் முதல் வெளிநாட்டு கல்வி வளாகத்தை அடுத்த ஆண்டு அபுதாபியில் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் சுதிர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையானது ஒரு முக்கிய மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விவாதிக்க அடுத்த ஆண்டு அமர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இன்னும் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், கல்லூரி வளாகத்தை எங்கு அமைப்பது, பாடத்திட்டம், மாணவர் அமைப்பு மற்றும் வணிக மாதிரி (business model) போன்றவை குறித்த விவாதங்கள் (Department of Education and Knowledge Abu Dhabi) ADEK மற்றும் IIT டெல்லி இடையே நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய தூதர் சஞ்சய் சுதீரின் கூற்றுப்படி, IIT கல்வி நிறுவனம் அதன் வருங்கால மாணவர்களுக்கு தரமான உயர்நிலைக் கல்வியை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் விவாதத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் IIT டெல்லியின் உயர்மட்டக் குழு அமீரக தலைநகருக்கு பயணம் மேற்கொண்டு, ADEK அதிகாரிகள் மற்றும் அமீரகத்தில் உள்ள பிற பங்குதாரர்களுடன் விரிவான விவாதங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது, ​​இந்தியாவில் 23 IIT வளாகங்கள் உள்ள நிலையில், அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்கி வருகின்றது. மேலும், இந்த நிறுவனம் உலகின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகக் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!