அமீரக செய்திகள்

அமீரகத்தில் பெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு..!! கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வலியுறுத்தல்..!!

நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் முசல்லாக்களில் (திறந்தவெளி இடங்கள்) ஜூலை 20 செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளியைப் பின்பற்றி ஈத் அல் அத்ஹா எனும் ஹஜ் பெருநாளிற்கான சிறப்பு தொழுகை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஈத் சிறப்புத் தொழுகை நடத்தப்படும் நேரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அபுதாபி: காலை 6.02

அல் அய்ன்: காலை 5.56

மதினத் சையத்: காலை 6.07

துபாய்: காலை 5.57

ஷார்ஜா: காலை 5.56

அஜ்மான்: காலை 5.56

(ஃபுஜைரா, உம் அல் குவைன் மற்றும் ராஸ் அல் கைமாவில் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்)

ஈத் அல் அத்ஹா சிறப்புத் தொழுகை நடத்தப்படும் இடங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

தொழுகைக்கு பிந்தைய பிரசங்கத்தின் அதிகபட்ச காலம் 15 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.

தொழுகை தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் முசல்லாக்கள் மற்றும் மசூதிகளின் கதவுகள் திறக்கப்படும்.

தொழுகை முடிந்த உடனேயே வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும். வழிபாட்டாளர்கள் தொழுகைக்காக தங்கள் சொந்த தொழுகை விரிப்புகளைக் கொண்டு வர வேண்டும்.

சமூக இடைவெளிக்கான ஸ்டிக்கர்கள் வைக்கப்படும்.

கொரோனாவால் பாதித்த நபர்கள் மற்றும் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்புடையோர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள கட்டாயம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் தொழுது கொள்ள செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாஷ் ரூம்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.

பிறகு ஹேண்ட்ஷேக்குகள் மற்றும் அரவணைப்புகளின் பாரம்பரிய நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.

வழிபாடு செய்பவர்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் தொழுகைக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ கூடுவதற்கு அனுமதி இல்லை.

அத்துடன் கைகுலுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!