அமீரக செய்திகள்

UAE: உங்கள் வாகன லைசென்ஸ் ப்ளேட் சேதமடைந்து விட்டதா..??? 400 திர்ஹம்ஸ் அபராதத்தை தவிர்ப்பது எப்படி..??

அபுதாபி நாட்டின் காவல்துறை, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் லைசென்ஸ் ப்ளேட் சேதமடைந்திருந்தால் அதனை மாற்றுவதற்கு மொபைல் ஃபோன் ஆப்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம், ஓட்டுநர்கள் மீது விதிக்கப்படும் 400 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்துவதைத் தவிர்க்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது.

அமீரகத்தின் ட்ராஃபிக் மற்றும் ஃபெடரல் டிராஃபிக் “வாகனத் தகடு எண்கள் இல்லாமை (Lacking of vehicle plate numbers)” விதி எண். 27 (b) இன் படி, சேதமடைந்த வாகன உரிமத் தகட்டை வைத்திருப்பதற்கான அபராதம் 400 திர்ஹம் ஆகும். எனவே இந்த அபராத்த்திலிருந்து விடுபடுவதற்கான எளிய வழியினை மக்களுக்கு ஆணையம் நினைவூட்டி உள்ளது.

அது மட்டுமல்லாமல், இன்னும் ஒரு சில மாதங்களில் மழைக்காலம் ஆரம்பிக்க கூடும் என்பதால் நிலையற்ற காலநிலையின் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் செலுத்த வேண்டிய அபராதங்களை பற்றியும் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

அபராதங்கள்:

  • மழைக் காலநிலையில் பள்ளத்தாக்குகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் மற்றும் அணைகளுக்கு அருகில் கூடினால்: 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு ப்ளாக் பாய்ண்ட்ஸ்
  • வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குள், அவற்றின் ஆபத்து அளவைப் பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டினால்: 2,000 அபராதம், 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல்
  • போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தடுப்பது மற்றும் அவசர காலங்கள், பேரிடர்கள், நெருக்கடிகள் மற்றும் மழையின் போது ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்களுக்கு வழி விடாமல் இருப்பது: 1,000 திர்ஹம் அபராதம், நான்கு ப்ளாக் பாய்ண்ட்ஸ் மற்றும் 60 நாள் வாகனங்கள் பறிமுதல்.

எனவே இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, மழைக்காலங்களில் கவனத்துடன் வாகனம் ஓட்டி அரசுடன் ஒத்துழைப்புமாறு போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!