அமீரக செய்திகள்

துபாய், அபுதாபியில் இலவச ஷட்டில் பஸ் சேவைகள்.. பஸ் ரூட், எப்படி பயணிப்பது போன்ற பல விபரங்களும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் பொதுமக்கள் பயணிப்பதை எளிதாக்கும் வகையில் ஒரு இடத்திலிருந்து நாம் செல்ல வேண்டிய பிரத்யேக இடத்திற்கு அழைத்து செல்லும் இலவச ஷட்டில் பேருந்து பயணங்களை வழங்குகின்றன.

அதேபோன்று துபாய் மற்றும் அபுதாபியிலும் பயணிகளின் வசதிக்காக இத்தகைய இலவச ஷட்டில் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அனைத்து இலவச ஷட்டில் பேருந்து விருப்பங்களின் விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1.அபுதாபி:

அபுதாபியில் ஃபெராரி வேர்ல்ட், லூவ்ரே அபுதாபி மற்றும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி போன்ற நகரத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் இலவச ஷட்டில் பேருந்தைப் பிடிக்க, நீங்கள் ‘Experience Abu Dhabi’ ஷட்டில் பஸ்ஸில் ஏறலாம்.

யாஸ் ஐலேண்ட், ஜுபைல் ஐலேண்ட், சாதியாத் ஐலேண்ட், அபுதாபி சிட்டி சென்டர் மற்றும் கிராண்ட் கேனல் பகுதியை இணைக்கும் எட்டு முக்கிய வழித்தடங்கள் வழியாக இந்த ஷட்டில் பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

ஷட்டில் பேருந்தில் பயணம் செய்வது எப்படி?

நீங்கள் ஷட்டில் பேருந்தில் பயணிக்க முன் பதிவு அல்லது டிக்கெட் தேவையில்லை. நியமிக்கப்பட்ட எந்த பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்தில் ஏறி, உங்கள் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி, நீங்கள் நுழையும் இடத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

பின்னர், உங்கள் முழு பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். சில நேரங்களில் பேருந்து நேரங்கள் மாறக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனை உறுதிப்படுத்திக் கொள்ள https://visitabudhabi.ae/en/plan-your-trip/around-the-emirate/shuttle- என்ற இணையதளத்தில் ‘download the routes and timetables’ என்பதைக் கிளிக் செய்து தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஷட்டில் பஸ் செல்லும் வழிகள்:

ஷட்டில் பஸ் எட்டு வழித்தடங்களில் சேவை செய்கின்றன, அவற்றில் உள்ள நிறுத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ரூட் A1

  • சாதியாத்தில் ஜுமைரா
  • பார்க் ஹயாத் அபுதாபி
  • ரிக்சோஸ் சாதியாத்
  • சாதியத் ரோட்டனா
  • மனரத் அல் சாதியாத் / பெர்க்லீ அபுதாபி
  • மம்ஷா அல் சாதியாத்
  • லூவ்ரே அபுதாபி

ரூட் A2

  • மம்ஷா அல் சாதியாத்
  • சவுத்தர்ன் சன் ஹோட்டல்
  • விந்தம் அபுதாபி
  • சிட்டி சீசன்ஸ் அல் ஹம்ரா ஹோட்டல்
  • நாவல் ஹோட்டல் சிட்டி சென்டர்
  • கஸ்ர் அல் ஹோஸ்ன்
  • கஸ்ர் அல் வதன்

ரூட் B1

  • கிராண்ட் ஹயாத் அபுதாபி ஹோட்டல்
  • எதிஹாட் டவர்ஸ்
  • ஹெரிடேஜ் வில்லேஜ்
  • ஃபவுண்டர்ஸ் மெமோரியல்
  • எமிரேட்ஸ் பேலஸ்
  • கஸ்ர் அல் வதன்
  • அல் ஹுதைரியாத் தீவு

ரூட் B2

  • கஸ்ர் அல் வதன்
  • கிராண்ட் மில்லினியம் அல் வஹ்தா
  • உம் அல் எமாரத் பூங்கா
  • மில்லினியம் அல் ரவ்தா ஹோட்டல்
  • ஷேக் சையத் கிரான்ட் மசூதி

வேறொரு எமிரேட்டில் இருந்து பறக்கும் விமானத்தைப் பிடிக்க ஷட்டில் பஸ்:

நீங்கள் பயணிக்க உள்ள விமானம் வேறு எமிரேட்டிலிருந்து பறந்தால், நீங்கள் ஒரு இலவச ஷட்டில் பஸ் சேவையைப் பயன்படுத்தலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் போன்ற விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு எமிரேட்டுகளுக்கு இடையேயான பேருந்து பயணத்தை இலவசமாக வழங்குகின்றன.

ஷட்டில் பேருந்தில் இருக்கையை முன்பதிவு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அதை 24 முதல் 48 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். துபாய், அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ளவர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்கின்றன.

யாஸ் எக்ஸ்பிரஸ் பஸ்:

நீங்கள் ‘எக்ஸ்பீரியன்ஸ் அபுதாபி’ ஷட்டில் பேருந்தைப் பயன்படுத்தி, யாஸ் தீவுக்குச் சென்றால், அங்குள்ள தீம் பூங்காக்களில் ஒன்றிற்கான டிக்கெட் அல்லது முன்பதிவு செய்திருந்தால், அப்பகுதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு இலவச ஷட்டில் பேருந்து சேவையிலிருந்தும் பயனடையலாம்.

அபுதாபி ஏர்போர்ட்-யாஸ் ஐலேண்ட்:

நீங்கள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணியாக இருந்து, யாஸ் ஐலேண்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்பதிவு செய்திருந்தால், இலவச ஷட்டில் பேருந்து பின்வரும் ஹோட்டல்களில் பயணிகளை இறக்கிவிடும்.

  • W ஹோட்டல்
  • ஹில்டன் ஹோட்டல்
  • யாஸ் பிளாசா ஹோட்டல்கள்
  • WB ஹோட்டல்
  • டபுள் ட்ரீ ஹோட்டல்

துபாய்- யாஸ் ஐலேண்ட்:

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஷட்டில் பேருந்து இயங்குகிறது. இதற்கு முன்பதிவு தேவையில்லை, மேலும் இலவச வைஃபை பேருந்துகளில் கிடைக்கிறது. நீங்கள் துபாயிலிருந்து வருகிறீர்கள் என்றால், பின்வரும் நிறுத்தங்களில் இருந்து பேருந்தில் ஏறலாம்:

  • ஷெரட்டன் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் ஹோட்டல், துபாய்
  • தேரா சிட்டி சென்டர் – மஜித் அல் ஃபுத்தைம் டவர் அருகில் நுழைவு 1

துபாயில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மால்களில் இருந்து இலவச ஷட்டில் பஸ்

நீங்கள் துபாய் ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தால், துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் மற்றும் கைட் பீச் போன்ற எமிரேட்டில் உள்ள பிரபலமான இடங்களுக்கு விருந்தினர்களைக் கொண்டு செல்லும் அவர்களின் இலவச ஷட்டில் பேருந்து சேவையைப் பயன்படுத்தலாம்.

அதேபோல், துபாயில் உள்ள  ஷாப்பிங் சென்டர்களும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச ஷட்டில் பஸ் சேவைகளை வழங்குகின்றன. சிட்டி வாக்கில் (city walk) துபாய் மால் மெட்ரோ ஸ்டேஷன் (டெஸ்லா ஷோரூமிற்கு அருகில் உள்ள எக்ஸிட்) மற்றும் தி பீச் / ஜுமைரா பீச் ரெசிடென்சஸ் (JBR) ஆகியவற்றிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷட்டில் பஸ் உள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!