அமீரக செய்திகள்

ஈத் அல் அதா விடுமுறை: அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்து..!! 900,000 பயணிகளை கையாளவுள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையம்..!!

அபுதாபி விமான நிலையங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில், ஈத் அல் அதாவிற்கு முன்னும் பின்னும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் (AUH), பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

குறிப்பாக, ஜூன் 23 மற்றும் ஜூலை 7 ஆகிய தேதிகளுக்கு இடையில், 59 நாடுகளில் 109 இடங்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட விமானங்களில் கிட்டத்தட்ட 900,000 பயணிகள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று அபுதாபி ஏர்போர்ட்ஸ் மதிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜூலை 2 ஆகிய நாட்களில் நிலையம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எமிரேட்டின் ஐந்து விமான நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் ஜூன் 24, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 65,000 பயணிகளுக்கு சேவை செய்ய எதிர்பார்க்கிறார்கள் என்றும் ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!