அமீரக செய்திகள்

பயணிகளின் கவனத்திற்கு!! எதிஹாட் ஏர்வேஸ் விமான பயணிகளுக்கான ஆன்லைன் செக்-இன் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்…

அபுதாபியை தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பின்படி, விமான பயணிகளுக்கான ஆன்லைன் செக்-இன் ொரு சில நாட்களுக்கு கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது.

விமான நிறுவனம் அதன் பயணிகள் சேவை அமைப்பிற்கு (Passenger Service System) சில திட்டமிடப்பட்ட அமைப்புகளை மாற்றுவதன் விளைவாக புதிய செயல்முறை ஆன்லைனில் கொண்டு வரப்படும் போது சில சேவைகள் செயலிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நாட்களுக்கு ஆன்லைன் செக்-இன் சேவை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் தற்காலிக இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், அனைத்து விமானங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும், அடுத்த சில நாட்களில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகளைக் குறைக்க குழுக்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்படி சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கான ஆன்லைன் செக்-இன் மார்ச் 4 முதல் மார்ச் 12 வரையிலும், அபுதாபியில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு மார்ச் 6 முதல் மார்ச் 12 வரையிலும் ஆன்லைன் செக்-இன் தற்காலிகமாக கிடைக்காது என்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக செக்-இன் திறக்கப்படும் நிலையில், பயணிகள் நேரடியாக செக்-இன் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பயணிக்கும் பயணிகள், https://etihad.com/faqs என்ற லிங்க்கை கிளிக் செய்து செக்-இன் நேரத்தைச் சரிபார்ர்த்துக் கொள்ளுமாறும், அத்துடன் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்து சுமூகமான பயணத்தை உறுதி செய்ய டிக்கெட்டுகளின் அச்சிடப்பட்ட அல்லது மின்னணு நகலை வைத்திருக்குமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!