அமீரக செய்திகள்

துபாய்: இனி குடிமக்களுக்கு வீட்டின் அருகிலேயே இலவச பார்க்கிங் சேவை..!! அறிவிப்பை வெளியிட்ட RTA..!!

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), குடியிருப்பாளர்களுக்கு புதிய பார்க்கிங் சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, எமிராட்டி குடிமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இலவசமாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பார்க்கிங் அனுமதிக்கு குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலவச பார்க்கிங் சேவையானது, வசிக்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கட்டண பொது பார்க்கிங் பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிமக்கள் தங்கள் விண்ணப்பங்களை RTA இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, வீட்டின் அளவைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் இலவச அனுமதிகளின் எண்ணிக்கை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு அறை, ஒரு ஹால் அல்லது ஒரு ஸ்டுடியோ கொண்ட குடியிருப்புக்கு இரண்டு அனுமதிகளும், இரண்டு அறைகள் மற்றும் ஒரு ஹால் கொண்ட ஒரு அறைக்கு 3 அனுமதிகளும், 3 அறைகள் மற்றும் ஒரு ஹால் கொண்ட குடியிருப்புக்கு 4 அனுமதிகளும் இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தவிர துபாயில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வாகனங்களை நிறுத்துவதற்காட பார்க்கிங் அனுமதிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளன. அவை

  1. வகை A: துபாயில் உள்ள A,B,C மற்றும் D ஆகிய கட்டண பார்க்கிங் மண்டலங்களில் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
  • 1 மாதம்: 500 திர்ஹம்
  • 3 மாதங்கள்: 1400 திர்ஹம்
  • 6 மாதங்கள்: 2,500 திர்ஹம்
  • 12 மாதங்கள்: 4,500 திர்ஹம்

2. வகை B: இந்த வகையை கட்டண பார்க்கிங் மண்டலங்களான B மற்றும் D இல் மட்டுமே பயன்படுத்த முடியும்.

  • 1 மாதம்: 250 திர்ஹம்
  • 3 மாதங்கள்: 700 திர்ஹம்
  • 6 மாதங்கள்: 1,300 திர்ஹம்
  • 12 மாதங்கள்: 2,400 திர்ஹம்

அவற்றில் குறிப்பாக, துபாய் இன்டர்நெட் சிட்டி, துபாய் மீடியா சிட்டி, நாலெட்ஜ் வில்லேஜ், ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு, டெய்ரா மீன் மார்க்கெட், துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மற்றும் கோல்ட் சூக் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கட்டண பார்க்கிங் அனுமதிகளைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!