அமீரக செய்திகள்

துபாயின் ஆடம்பர ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட ஆசையா? வெறும் 75 திர்ஹம்ஸ் இருந்தாலே போதும்..!!

துபாயின் ஆடம்பரமான ஹோட்டல்களை உங்களது குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்க விரும்புகிறீர்களா..?? அப்படியானால், துபாயின் சிறந்த ஹோட்டல்களில் 75 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான செலவில் அங்குள்ள சின்னச்சின்ன ஹோட்டல்களின் மெனுவில் உள்ள உணவுகளை சாப்பிடுவது மற்றும் பிரபல ஹோட்டல்களின் முன்னால் செல்ஃபி எடுப்பது போன்றவற்றை உங்கள் பட்ஜெட்டிற்குள் அனுபவிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் பட்ஜெட் ஃபிரெண்ட்லியான அனுபவத்திற்கு, பிரபலமான ஹோட்டலுக்குள் நுழைய வேண்டிய இடம் மற்றும் மெனுவில் உள்ள சிறந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பொருட்களை ஆர்டர் செய்வது போன்றவற்றை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம், பிரம்மாண்ட ஹோட்டல்களின் அறைகளுக்குள் சென்று பார்க்க முடியாது, ஆனால் குறைந்த பட்ஜெட்டில் அங்கு ஒரு சிற்றுண்டி மற்றும் பானத்தை அனுபவிக்கலாம். அப்படியான சில இடங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

அர்மானி ஹோட்டல் துபாய்:

துபாயின் புர்ஜ் கலிஃபாவிற்குள் அமைந்துள்ள இந்த ஹோட்டலில், மிகவும் குறைந்த விலைகளில் சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் போன்றவற்றை அனுபவிக்கலாம். மேலும், சுவையான குக்கீஸ் மற்றும் மினி மேக்ரோன்கள் போன்றவற்றின் விலை 10 திர்ஹம் முதல் இங்கு தொடங்குகின்றன.

இவற்றுடன் 50 திர்ஹம் முதல் தொடங்கும் சூடான பானங்களின் சுவையை ருசிக்கலாம்.  குறிப்பாக, இங்கு Margarita pizza 100 திர்ஹம்களுக்கு கீழ் கிடைக்கும். அத்துடன் இங்கு செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

  • எங்கு செல்ல வேண்டும்: அர்மானி/லாஞ்ச்
  • என்ன ஆர்டர் செய்யலாம்: ஒரு சூடான பானம் மற்றும் மினி மேக்கரோன்.
  • மொத்த விலை: 60 திர்ஹம்
  • இடம்: புர்ஜ் கலீஃபா, ஷேக் முகமது பின் ரஷித் பவுல்வர்டு, டவுன்டவுன் துபாய் (04 888 3888).

அட்லாண்டிஸ் தி பாம்:

துபாயின் முக்கியமான இந்த ஹோட்டல் ஏராளமான டைனிங் ஸ்பாட்களைக் கொண்டுள்ளது. மலிவு விலையில் உள்ளே செல்ல வேண்டுமெனில், போஸிடான் கோர்ட்டில் (Poseidon Court) அமைந்துள்ள போஸிடான் கஃபேக்குச் செல்லலாம். அங்கு 50 திர்ஹம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்னிகள் (sarnies) 40 திர்ஹம்களில் ஸ்மூத்திகள் மற்றும் 11 திர்ஹம்களுக்கு பேஸ்ட்ரிகள் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

  • இடம்: கிரசன்ட் ரோடு, தி பாம் ஜுமேரா (04 426 2000).
  • எங்கு செல்ல வேண்டும்: போஸிடான் கஃபே.
  • என்ன ஆர்டர் செய்யலாம்: பிஸ்தா லேட் மற்றும் குரோசண்ட் (Pistachio latte and croissant).
  • செலவு: 51 திர்ஹம்.

அட்லாண்டிஸ் தி ராயல்:

இந்த பிரம்மாண்ட ஹோட்டலில் உள்ள ராயல் டீரூம் (Royal Tearoom) என்ற இடத்திற்கு நீங்கள் மலிவு விலையில் உண்ணலாம். இங்கு ஒரு காஃபி மற்றும் ஒரு பேஸ்ட்ரியை வாங்கிக் கொண்டு, அற்புதமான இடத்தின் லாபியின் உள்ளே உட்கார்ந்து அனைத்தையும் ரசிக்கலாம்.

  • இடம்: கிரசன்ட் ரோடு, தி பாம் ஜுமேரா (04 426 2000).
  • செல்ல வேண்டிய இடம்: ராயல் டீரூம்
  • ஆர்டர் செய்ய வேண்டிய உணவு: ஹோம்மேட் வியன்னோய்செரி (Home-baked viennoiserie) மற்றும் ஆர்கானிக் வுயி ஊலாங் டீ (organic wuyi oolong tea)
  • விலை: 72 திர்ஹம்

புர்ஜ் அல் அரப்:

துபாயின் பிரபலமான புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்குள் செல்வதற்கு சிறந்த வழி என்றால், சாஹ்ன் எடாருக்குச் (Sahn Eddar) செல்வதுதான், அங்கு 75 திர்ஹம்களுக்கு பேஸ்ட்ரி மற்றும் சூடான பானத்தை அனுபவிக்க முடியும்.

அத்துடன் ஹோட்டலின் பிரம்மாண்டத்தை சுற்றிப் பார்க்கவும், அது எவ்வாறு கட்டப்பட்டது என்பதைப் பற்றி மேலும் அறியவும் விரும்பினால், ஒரு நபருக்கு 249 திர்ஹம் செலவாகும். இதற்கு நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

  • இடம்: புர்ஜ் அல் அரபு, ஜுமைரா, உம்ம் சுகீம் https://insideburjalarab.com/
  • செல்ல வேண்டிய பகுதி: சான் எடார் (Sahn Eddar)
  • என்ன ஆர்டர் செய்வது: ஹோம் மேடு ஸ்கோன்கள் உறைந்த கிரீம் (scones served with clotted cream) மற்றும் ஜாம் மற்றும் மச்சியாடோவுடன் (macchiato) கிடைக்கும்.
  • விலை: 75 திர்ஹம்

Related Articles

Back to top button
error: Content is protected !!