அமீரக செய்திகள்

UAE: புது வருடத்தை முன்னிட்டு ‘100 மில்லியன் திர்ஹம்’ பரிசுத்தொகையை அறிவித்த எமிரேட்ஸ் டிரா..!!

புது வருடம் 2022 ம் ஆண்டு பிறக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய டிராவான ‘எமிரேட்ஸ் டிரா (Emirates Draw)’ வரும் ஜனவரி 1 ம் தேதி நடைபெறவுள்ள டிராவிற்கு 100 மில்லியன் திர்ஹம்ஸை (இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வரையிலும் அதன் வெற்றியாளருக்கான பரிசுத்தொகையாக 77,777,777 திர்ஹம்ஸ் வழங்கி வந்த நிலையில், அதனை 89 மில்லியன் திர்ஹம்சாக உயர்த்தி டிசம்பர் 18 ஆம் தேதி ராஃபிள் டிரா நடத்தியது. அதை தொடர்ந்து டிசம்பர் 25 ம் தேதி நடைபெற்ற டிராவில் அதன் பரிசுத்தொகை 95 மில்லியன் திர்ஹம்சாக உயர்த்தப்பட்டது. எனினும் இந்த டிராக்களில் முதல் பரிசை எவரும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புது வருடத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 1 ம் தேதி நடைபெறவுள்ள டிராவிற்கான பரிசுத்தொகையை 100 மில்லியன் திர்ஹம்சாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அமீரகத்தின் மிகப்பெரிய டிராவின் பரிசுத்தொகையானது தற்பொழுது முந்தையதை வாரங்களை விடவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பரிசுத்தொகையை அறிவித்துள்ள இந்த எமிரேட்ஸ் டிராவில் வலது பக்கத்தில் இருந்து தொடங்கி இடது பக்கமாக டிராவிற்கான ஏழு எண்களையும் சரியான வரிசையில் பொருத்தும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர், இந்த 100 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற புதிய பெரும் பரிசுத்தொகையை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார். மேலும் அதன் வரிசையில் ஏழுக்கும் குறைவான பொருத்த எண்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பரிசுகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஐக்கிய அரபு அமீரகத்தில் பிக் டிக்கெட் (Big Ticket) மற்றும் மஹ்சூஸ் (Mahzooz) போன்றவையும் இது போன்ற மிகப்பெரிய பரிசுத்தொகையுடன் தங்களின் வாராந்திர மற்றும் மாதாந்திர டிராக்களை நடத்தி வருகின்றன. இதில் மஹ்சூஸ் ஒவ்வொரு வாரமும் 10 மில்லியன் திர்ஹம்ஸை பரிசுத்தொகையாகவும், பிக் டிக்கெட் 25 மில்லியனை பரிசுத்தொகையாகவும் வரக்கூடிய நாட்களில் நடைபெறவுள்ள டிராக்களுக்கு முதல் பரிசாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் கணக்கில் பரிசுத்தொகையை அள்ளித்தரும் எமிரேட்ஸ் டிராவில் கலந்து கொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

மில்லியன் கணக்கில் பரிசுத்தொகையை அள்ளித்தரும் எமிரேட்ஸ் டிராவில் கலந்து கொள்வது எப்படி…??

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!