அமீரக செய்திகள்

துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் இரண்டாவது முறையாக வென்று 1 மில்லியன் டாலரை பெற்ற இந்தியர்..!! BMW காரை வென்ற தமிழர்..!!

துபாயில் நடைபெற்று வரும் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் இந்தியர் ஒருவர் இரண்டாவது முறையாக 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார்.

துபாயில் வசிக்கும் 55 வயதான  ஸ்ரீ சுனில் ஸ்ரீதரன் என்பவர், மில்லினியம் மில்லியனர் ப்ரொமோஷனில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் டிராவில் இரண்டு முறை வென்ற 8வது நபர் என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஆன்லைனில் மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 388 இல் அதிர்ஷ்ட டிக்கெட்டை (எண் 1938) வாங்கியிருக்கிறார். ஸ்ரீதரன் இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4638 டிக்கெட் எண் கொண்ட மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 310 இல் 1 மில்லியன் டாலரை வென்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 2020 இல் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1746 இல் ரேஞ்ச் ரோவர் HSE 360PS (Fuji White) காரையும் அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் டூட்டி ஃப்ரீ ப்ரொமோஷன்களில் தொடர்ந்து பங்கேற்கும் இவர் முதலில், அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் மதிப்பீட்டு மேலாளராகப் பணியாற்றியுள்ளார். இப்போது துபாயில் தனது சொந்த ஆன்லைன் வர்த்தக வணிகத்தை நடத்தி வருகிறார்.

இது பற்றி அவர் கூறுகையில் “என்னை இரண்டாவது முறையாக $1 மில்லியன் வெற்றியாளராக மாற்றியதற்காக துபாய் டூட்டி ஃப்ரீக்கு நன்றி. இந்த அற்புதமான ப்ரொமோஷனில் பங்கேற்கவும், பொறுமையாகவும் இருக்குமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறேன். நான் நிச்சயமாக அதற்கு ஒரு ஆதாரம்!” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதரன், 1999 இல் மில்லினியம் மில்லினியம் ப்ரோமோஷன் தொடங்கியதில் இருந்து $1 மில்லியன் வென்ற இந்தியர்களில் 188வது இந்திய நாட்டவர் ஆவார்.

அதே போல் துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிக்கெட் வாங்குபவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Millennium Millionaire-ஐத் தொடர்ந்து, இரண்டு சொகுசு வாகனங்களுக்கான Finest Surprise குலுக்கல் நடத்தப்பட்டது. துபாயில் வசிக்கும் 41 வயதான எமிராட்டி  ரஷித் அல் முதாவா, ஏப்ரல் 21 அன்று ஆன்லைனில் வாங்கிய ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 1804 இன் டிக்கெட் எண் 0924 உடன் BMW 750Li xDrive M Sport (மினரல் ஒயிட் மெட்டாலிக்) காரை வென்றுள்ளார்.

கடைசியாக, சென்னையைச் சேர்ந்த 61 வயதான புருஷோத்தமன் பச்சைராஜ், ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் சீரிஸ் 496 இல் டிக்கெட் எண் 0814 உடன், BMW R 1250 RS (Imperial Blue Metallic) மோட்டார் பைக்கை வென்றார். அவர் ஏப்ரல் 23 அன்று இந்தியாவிலிருந்து துபாய் வழியாக ஈராக் செல்லும்போது டிக்கெட்டை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button
error: Content is protected !!