அமீரக செய்திகள்

அமீரகத்தில் தவறான செயல்களுக்கு VPN பயன்படுத்தினால் 2 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்.. சிறைத்தண்டனையும் உண்டு..உஷார்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் VPN எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (Virtual Private Networks) பயன்பாடு உலகளவில் பார்க்கும்போது அமீரகத்தில் மிகவும் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரக குடியிருப்பாளர்களில் பத்து நபர்களுக்கு நான்கு பேர் வீதம் VPN ஐ பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

VPN பயன்பாடு அமீரகத்தில் சட்டவிரோதமானது செயல் இல்லை என்றாலும், அதனை தவறான செயல்களுக்கு பயன்படுத்துவது கடுமையான குற்றம் எனவும் இந்த குற்றத்திற்காக 2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்லஸ் VPN (Atlas VPN) நடத்திய ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான அமீரக மக்கள் VPN ஐ பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. சதவீத அடிப்படையில் பார்க்கும்போது 38.72 சதவீத அளவில் அமீரகத்தில் VPN செயலி பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அமீரகத்தை தொடர்ந்து VPN பயன்பாட்டில் கத்தார் 27.95 சதவீதமும், ஓமான் 23.82 சதவீதமும், சவுதி அரேபியா 15.54 சதவீதமும் மற்றும் குவைத் 13.01 சதவீதமாகவும் உள்ளதாக அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) முன்னதாக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் உள் நோக்கங்களுக்காக VPN பயன்படுத்தப்படலாம் என்று கூறியிருந்தது.

இருப்பினும், சட்டவிரோத வழிமுறைகளுக்கு VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் குற்றம் செய்வது ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின் கீழ் கடுமையான குற்றமாகும். மேலும், வலைத்தளங்களை அணுக IP அட்ரெஸ்ஸை மறைத்து VPN பயன்படுத்துவது, தடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கேமிங் பயன்பாடுகள் உள்ளிட்ட காரணத்திற்கு VPN ஐ பயன்படுத்துவது சட்டவிரோதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!