அமீரக செய்திகள்

UAE : இனி அனைத்து மருத்துவமனைகளும் நோயாளியின் சுகாதார தகவலை அணுக முடியும்..!! MoHAP அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களின் உடல்நலம் தொடர்பான தரவை அணுகுவதற்கு புதிய டிஜிட்டல் தளமான “Riyati” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது பொது மற்றும் தனியார் துறையில் உள்ள அனைத்து சுகாதார சேவை வழங்குநர்களுக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல்நலம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவை அணுக அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ​கிளினிக்குகளும் இந்த புதிய டிஜிட்டல் தளத்தின் மூலம் ஒவ்வொரு நோயாளியின் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரவை அணுகலாம், இதில் நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த தளத்தின் மூலம் நோயாளிகள் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கிளினிக்குகளுக்கு இடையில் எளிதில் மாறுவதற்கு உதவும் மற்றும் மருத்துவ பதிவுகள் மற்றும் தரவுகளை சீராக பரிமாறிக்கொள்ள உதவும் என்று MoHAP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Riyati இயங்குதளம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நோயாளியின் சுகாதாரத் தரவை எளிதில் அணுகக்கூடிய ஒரு மைய மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்றும் பொது மற்றும் தனியார் சுகாதார வசதிகளை ஒன்றிணைப்பதன் மூலம் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் சுகாதார மேலாண்மை துறையின் செயல்திறன், தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஆதரவு சேவைகள் துறை துணை செயலாளர் டாக்டர் அப்துல் அஜீஸ் அல் ஸரூனி அவர்கள் கூறுகையில், “Riyati இயங்குதளம் தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பராமரிக்கும் அதே வேளையில், சுகாதார காப்பீட்டு வழங்குநர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு துல்லியமான தரவை வழங்குவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் விஷன் 2021 சுகாதாரத்தை யதார்த்தமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இது சமூகத்திற்கு சிறந்த சேவைகளை வழங்குவதையும் தனிநபர்களின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!