வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியா: உம்ரா செய்வதற்காக குடும்ப விசா பெறுவது எப்படி..?? வழிமுறைகள் என்ன..?? அமைச்சகம் தகவல்…

சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் உம்ராவுக்கான குடும்ப விசாவை எவ்வாறு பெறுவது என்ற வழிமுறைகளை அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த விசா மூலம், வெளிநாட்டினர் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவில் உம்ரா மேற்கொள்ளலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் படி, குடும்ப விசாவைப் பெற, நாட்டில் வசிக்கும் உறவினர் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் உறவினர் சவூதி குடிமகனாகவோ அல்லது குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், https://visa.mofa.gov.sa/ என்ற அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விசாவிற்கான விண்ணப்பத்தைப் பெறலாம். இதனையடுத்து, விசா வைத்திருப்பவர்கள் மக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குச் செல்வதற்கு முன் Nusuk அல்லது Tawakkalna சர்வீசஸ் ஆப்ஸ் மூலம் உம்ரா சந்திப்பை முன்பதிவு செய்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

Nusuk ஆப் மூலம் பதிவு செய்வதற்கான வழிமுறை:

  1. Nusuk செயலியில் லாக்-இன் செய்யவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
  2. உள்நுழைந்ததும், “Holy Mosque Services” என்ற மெனுவில் உள்ள “Umrah” என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. விரும்பிய அல்லது கிடைக்கும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நேர ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. வழிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்ளவும்.
  6. ‘Continue’ என்பதை அழுத்தவும்.
  7. இதனையடுத்து நீங்கள் உம்ரா அனுமதியைப் பெற்றுள்ளதாக கூறப்படுவீர்கள்

உம்ரா செய்ய வரும் வெளிநாட்டினருக்கு சவுதி வழங்கியுள்ள பல்வேறு வசதிகள்

இந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து சுமார் 10 மில்லியன் முஸ்லிம்கள் உம்ரா செய்வார்கள் என்று சவுதி அரேபியா எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சவுதி அரேபியா வெளிநாட்டு முஸ்லிம்கள் உம்ரா செய்ய நாட்டிற்கு வருவதற்கு பல வசதிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், தனிப்பட்ட (personal), அரைவல் மற்றும் டூரிஸ்ட் விசாக்கள் போன்ற பல்வேறு வகையான நுழைவு விசாக்களை வைத்திருக்கும் முஸ்லீம்கள் உம்ராவை மேற்கொள்ளவும், இ-அப்பாயின்ட்மென்ட்டை பதிவு செய்த பிறகு, மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியில் உள்ள அல் ரவ்தா அல் ஷரீஃபாவை பார்வையிடவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையில், உம்ரா விசாவை 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக சவூதி அதிகாரிகள் நீட்டித்துள்ளனர் மற்றும் இந்த விசா வைத்திருப்பவர்கள் அனைத்து தரை, வான் மற்றும் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதற்கும் எந்த விமான நிலையத்திலிருந்தும் வெளியேறவும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், GCC நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சவூதி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் அவர்கள் உம்ரா செய்ய முடியும் என்றும் சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!