அமீரக செய்திகள்

கிரீன் பாஸிற்கு முடிவு கட்டிய அபுதாபி..!! அமீரகத்தில் நீக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நடவடிக்கை..!!

கடந்த இரண்டரை வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது அமீரகம். மருத்துவமனை, மாற்றுத்திறனாளிகள் மையம் இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் முக கவசம் அணிய தேவையில்லை என அரசு அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அமீரகவாசிகள் அனைவரும் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக அபுதாபியில் உள்ள குடியிருப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர். ஏனெனில் அவர்கள் இப்போது ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய தங்கள் Al Hosn அப்ளிகேஷனில் கிரீன் பாஸை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

அதாவது அபுதாபியில் பொது இடங்களுக்குள் நுழைய அல் ஹோஸன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் இருக்க வேண்டும் என்ற நடைமுறையானது கடந்த ஜூன் 2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், குடியிருப்பாளர்கள் தங்கள் அப்ளிகேஷனில் கிரீன் பாஸை பராமரிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 7, திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள பல கொரோனா நடவடிக்கைகளால் பொது இடங்களுக்குள் நுழைய கிரீன் பாஸ் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அபுதாபியில் இருக்கும் ஷாப்பிங் மால் நுழைவாயில்களில் கிரீன் பாஸ் தேவை என ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டுள்ளன.

அபுதாபி குடியிருப்பாளர்கள் தெரிவிக்கையில் “இனி ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய எவ்வித சிரமமும் இருக்காது. சில சமயங்களில் கிரீன் பாஸ் செல்லுபடி காலம் முடிவடைந்தது தெரியாமல் இந்த இடங்களுக்கு சென்று நுழைவாயிலில் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வுகள் இனி நடக்காது. இதன் காரணமாக அடிக்கடி PCR சோதனை எடுக்க வேண்டிய தேவையுமில்லை. இதனால் கடந்த இரு ஆண்டுகள் போலல்லாமல் முன்பு இருந்ததைப் போல எல்லா இடங்களுக்கும் முக கவசமும் இன்றி செல்லலாம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளனர்

Related Articles

Back to top button
error: Content is protected !!