அமீரக செய்திகள்

UAE: துபாயில் இ-ஸ்கூட்டர் ஓட்டுநர் விபத்து.. போக்குவரத்து விதிகள் குறித்த காவல்துறை விழிப்புணர்வு..!

துபாயில் இரவு நேரத்தில் வாகனம் மோதியதில் இ-ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கருப்பு ஆடை அணிந்துகொண்டு கருப்பு இ-ஸ்கூட்டரில் அவர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பதிவுத் துறையின் தலைவர் கேப்டன் கதேர் முகமது பின் சுரூர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஹட்டா காவல்துறை இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். ஹட்டா காவல் நிலையத்தின் செயல் இயக்குனரான கர்னல் அப்துல்லா ரஷித் அல் ஹஃபீத், ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தினார்.

இது குறித்து கூறிய அவர், ஹெல்மெட், பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகளை அணிந்து, பிரகாசமான வெள்ளை மற்றும் சிவப்பு பிரதிபலிப்பான விளக்கை பெருத்த வேண்டும் என்றார். “இ-ஸ்கூட்டர் இடங்களில் நிறுத்தப்பட வேண்டும். போக்குவரத்து இடையூறுகளைத் தூண்டும் பகுதிகளில் விடக்கூடாது. ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். பிற சாலை பயனர்களுக்கு போக்குவரத்து அபாயங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அல் ஹஃபீத் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!