அமீரக செய்திகள்

அமீரகத்தில் அதிகரிக்கும் ஃப்ளூ தொற்று…!! தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலத்தை முன்னிட்டு பரவலாக காய்ச்சல் அதிகரித்து வருவதால் அமீரகத்தில் உள்ள சுகாதார மையங்களில் குழந்தை நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகமாக பரவும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் உடல்நிலை சரியில்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் ஃப்ளூ பாதிப்பு அதிகரிப்பதன் காரணத்தால் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பயணம் செய்ய கூடிய வாய்ப்பும் இருப்பதால், தங்கள் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பெற்றோர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஃப்ளூ தடுப்பூசி என்பது மருத்துவர்களின் கூற்றுப்படி, நோய்த்தொற்றின் தீவிரம் மற்றும் உடல்நல சிக்கல்களைத் தவிர்க்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

இது குறித்து ஆஸ்தெர் கிளினிக்கின் சிறப்பு குழந்தை நல மருத்துவர் டாக்டர் மீனாட்சி செசாமா கூறியதாவது “குளிர்காலம் தொடங்கியுள்ளதால், காய்ச்சல், இருமல், சளி, உடல்வலி, வாந்தி, சுவாசப் பிரச்சனை போன்றவற்றால் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அதிக அளவில் குழந்தைகள் வருகின்றனர். காய்ச்சல் மற்றும் RSV தொற்றுகள் அதிகரித்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனா கட்டுப்பாடுகளும் பெரிய அளவில் தளர்த்தப்பட்டுள்ளன. இன்ஃப்ளூயன்ஸாவின் அபாயத்தைக் குறைக்க விரும்பும் பயணிகள் தாங்கள் புறப்படுவதற்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தடுப்பூசி போடுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இன்ஃப்ளூயன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னரும் கூட இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை குழந்தைகள் போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!