Uncategorized

அமீரகத்தில் அடித்தது ‘தூசி புயலோ, மணல் புயலோ அல்ல’.. வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..?

அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானிலையானது தூசி நிறைந்து காணப்பட்டதால் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டது. இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அதிகாரிகள் கூறுகையில், இது புழுதிப் புயலோ அல்லது மணல் புயலோ அல்ல என்று விளக்கியுள்ளனர்.

இது பற்றி விவரிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்டது தூசியோ அல்லது மணல் புயலோ அல்ல. இதை நாங்கள் புயல் என்று அழைப்பதில்லை. இது தூசி இடைநிறுத்தம் (dust suspension)” என்று NCMஐச் சேர்ந்த டாக்டர் அஹ்மத் ஹபீப் கூறியுள்ளார்.

அப்போ, ஐக்கிய அரபு அமீரகத்தில் என்ன நடந்தது?

டாக்டர் ஹபீப் கூறுகையில், “இந்த தூசி இடைநிறுத்தம் (dust suspension) எனும் நிகழ்வானது நாட்டின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் இருந்து உருவாகி வருகின்றது. அதாவது தெற்கில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின்  தென்கிழக்கு பகுதியில் (அமீரகம் மற்றும் ஓமானுக்கு இடையிலான பகுதி) பலத்த காற்று வீசுவதால் அப்பகுதியில் மணல்புயல் உருவாவதன் காரணமாக இங்கு தூசி இடைநிறுத்தம் எனும் நிகழ்வானது ஏற்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

தூசிக்கும் மணல் புயலுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள், இரண்டும் மண் துகள்களால் ஆனது. ஆனால் மணல் புயல்கள் மணல் துகள்களை உருவாக்குகின்றன. ஆனால் புவியீர்ப்பு விசையானது மணல் துகள்களை அதிக தூரம் இடமாற்றம் செய்ய அனுமதிக்காது.

ஆனால் தூசி துகள்கள் வேறுபட்டவை. தூசித் துகள்களின் தாக்கம் மிகவும் பரந்த அளவில் பரவக்கூடும், சில சமயங்களில் கண்டங்கள் முழுவதும் பரவுக் கூடும் வாய்ப்பும் உள்ளது. மணல் புயல் காற்றின் வேகம் தூசி புயல் காற்றின் வேகத்தை விட குறைவானதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!