அமீரக செய்திகள்

UAE: கோடிகளை அள்ளித்தரும் பிக் டிக்கெட்டின் அதிரடி ஆஃபர்..!! 2 டிக்கெட் வாங்கினால் 2 இலவசம்..!!

அபுதாபியில் நடத்தப்பட்டு வரும் ராஃபிள் டிராவான பிக் டிக்கெட், தற்பொழுது பிக் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கு புதிய சலுகயை அறிவித்துள்ளது. அதாவது ‘Buy 2 Get 2 free’ என்ற ப்ரோமோஷன் மூலம் வாடிக்கையாளர்கள் கோடீஸ்வரர் ஆவதற்கு அதிக வாய்ப்புகளை பிக் டிக்கெட் வழங்குவதாக பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிராண்ட் பரிசுகள் மற்றும் சொகுசுக் கார்கள் போன்ற இணையற்ற பரிசுகளுக்கு பேர் போன ரேஃபிள் டிராவான பிக் டிக்கெட், வரவிருக்கும் 15 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசு டிராவின் போது வாடிக்கையாளர்களுக்கு வெற்றி பெற கூடுதல் வாய்ப்புகளை வழங்கும் புதிய ப்ரோமோஷனை வெளியிட்டுள்ளது.

பிக் டிக்கெட் டிராவின் புதிய ப்ரோமோஷன் படி, ஜூலை 3-ம் தேதி நடைபெறும் டிராவிற்கு பிக் டிக்கெட் இணையதளம், அல் அய்ன் விமான நிலையம் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள அதன் கடைகளில் இரண்டு ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்கும் எவரும், கூடுதலாக இரண்டு டிக்கெட்டுகளை இலவசமாகப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இது பிக் டிக்கெட் வழங்கும் 15 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசைத் தட்டிச் செல்ல இது கூடுதல் வாய்ப்புகளாக அமையும் என பிக் டிக்கெட் நிர்வாகம் இது குறித்து கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தக் காலகட்டத்தில் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் வாராந்திர இ-டிராவில் நுழைந்து, 23 வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதற்கான சிறந்த வாய்ப்பையும் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், ஜூலை 3 ம் தேதியன்று 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுடன் இரண்டாம் பரிசாக 100,000 திர்ஹமும், 70,000 திர்ஹம், 60,000 திர்ஹம், 50,000 திர்ஹம் மற்றும் 30,000 திர்ஹம் போன்ற பரிசுத் தொகைகள் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது பரிசுகளாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிக் டிக்கெட் லைவ் டிரா அடுத்த மாதம் ஜூலை 3 ஆம் தேதியன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!