அமீரக செய்திகள்

அபுதாபியின் புதிய ஏர்போர்ட் திறக்கப்படும் தேதி அறிவிப்பு.. முதல் பயணத்தை தொடங்கும் எதிஹாட் ஏர்வேஸ்..!!

அபுதாபியில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த புதிய சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் A பொதுமக்கள் பயண்பாட்டிற்கு வரவிருக்கும் அதிகாரப்பூர்வ தேதியை அபுதாபி விமான நிலையம் அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய விமான நிலையத்தில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று இன்று திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, டெர்மினல் Aவின் அதிகாரப்பூர்வ திறப்புவிழாவிற்கு முன்னதாக, எதிஹாட் ஏர்வேஸ் அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு கொண்டாட்ட முறையிலான விமானத்தை (ceremonial flight) இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக, அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு விமான சேவை புரிந்து வரும் விமானங்களும், மற்ற விமான நிறுவனங்களின் விமானங்களும் இரண்டு வார காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக புதிய டெர்மினல் Aக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முதலாவதாக விஸ் ஏர் அபுதாபி (Wizz Air Abu Dhabi) மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச விமான நிறுவனங்கள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய டெர்மினலில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, எதிஹாட் ஏர்வேஸ் நவம்பர் 9ம் தேதி முதல் புதிய விமான நிலையத்திலிருந்து தினசரி 16 விமானங்களை இயக்கும் என்றும், நவம்பர் 14 ம் தேதியிலிருந்து ஏர் அரேபியா அபுதாபி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 10 விமான நிறுவனங்களின் விமானங்கள் புதிய விமான நிலையத்திலிருந்து முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நவம்பர் 14 முதல், அபுதாபியை தலைமையிடமாக கொண்டு விமான சேவையை வழங்கி வரும் எதிஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா அபுதாபி மற்றும் விஸ் ஏர் அபுதாபி ஆகியவற்றுடன் பிற நாடுகளைச் சேர்ந்த 25 விமான நிறுவனங்களையும் சேர்த்து புதிய டெர்மினல் A இலிருந்து 28 விமான நிறுவனங்கள் முழுமையாக செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!