அமீரக செய்திகள்

UAE: சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்காத உணவகத்தை அதிரடியாக மூடிய அதிகாரிகள்..!!

அபுதாபியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்களுக்கான விதிகளை உணவகங்கள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை ஆராய அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட விதிகளை மீறிய உணவகம் ஒன்றை அதிகாரிகள் இழுத்து மூடியுள்ளனர்.

அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA), அபுதாபியில் உள்ள கோஷரி அண்ட் ஹல்வானி அல் தஹ்ரிர் (Koshary and Halwani Al Tahrir Restaurant) எனும் உணவகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்கத் தவறியதற்காக நிர்வாக ரீதியாக மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ADAFSA வெளியிட்டுள்ள தகவல்களின்படி, CN-3824604 என்ற வணிக உரிம எண் கொண்ட உணவகம், உணவுப் பாதுகாப்பு தொடர்பான 2008 ஆம் ஆண்டின் சட்ட எண் (2) ஐ மீறுவதாகவும், அதனால் நுகர்வோர் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2008 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட உணவுப்பாதுகாப்பு தொடர்பான சட்டம் எண். 2 ‘எமிரேட்டில் உள்ள உள்நாட்டு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டாலும் அல்லது கையாளப்பட்டாலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உணவுப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனியார் துறையின் பொறுப்பு அவசியம்’ என்று வலியுறுத்துகிறது.

எனவே, அபுதாபி முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பொது மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதையும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குவதையும் உறுதிசெய்ய ADAFSA அதிகாரிகள் உணவகங்களுக்கு கள ஆய்வு மற்றும் ஆய்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், இதுபோன்ற உணவுப்பதுகாப்பு தொடர்பான விதிமீறல்களை எங்கேனும் கண்டால் 800555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!