அமீரக செய்திகள்

துபாய் பயணிகளின் கவனத்திற்கு: இந்தியா, இலங்கையில் இருந்து துபாய் வர GDRFA ஒப்புதல் கட்டாயம்..!!

இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் குடியிருப்பாளர்கள் பொது வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் (GDRFA) யின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று துபாயின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விமான நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பில் உறுதி செய்துள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆபரேட்டர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், விமானம் ஏறுவதற்கு முன்பு ஒரு பயணி அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திருப்பதை விமான நிறுவனங்கள் உறுதிசெய்யும் மற்றும் சரிபார்க்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு பயணிகளையும் விமான நிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்வரும் குடியிருப்பாளர்களுக்கு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தேவையான கொரோனா தடுப்பூசிக்கான டோஸ்களைப் பெற்று மற்றும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு குறைந்தது 14 நாட்களைக் கடந்த செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவ நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாத பின்வரும் குடியிருப்பாளர்களும் அமீரகம் பயணிக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட மருத்துவத் துறையின் ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அமீரகத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறையின் ஊழியர்கள்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் படிக்கும் மாணவர்கள்.

மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் வர விரும்பும் செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்கள்

உள்ளூர் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள்.

பயணிகள் கடைபிடிக்க வேண்டியவை

விமானத்தில் ஏறுவதற்கு முன் சோதனைக்கான மாதிரி சேகரிக்கும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 சோதனைச் சான்றிதழை வைத்திருப்பது.

QR குறியீடு முறையைப் பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களிலிருந்து அவை வழங்கப்பட வேண்டும்.

விமானத்தில் ஏறுவதற்கு முன் ரேபிட் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பிறகு மற்றுமொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயண நெறிமுறை

துபாய்க்கு பயணிக்கவுள்ளவர்கள் ஒப்புதலுக்காக, பொது குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகார இயக்குநரகத்தின் இணையதளம் மூலம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: https://smart.gdrfad.gov.ae/homepage.aspx

ஐக்கிய அரபு அமீரகத்தில் தேவையான தடுப்பூசி  டோஸ்களைப் பெற்று, இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு குறைந்தது 14 நாட்களைக் கடந்த, செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழை பொது இயக்குநரகம் மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். https://smart.gdrfad.gov.ae/homepage.aspx

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கான இந்த நெறிமுறைகளுடன் இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது வலைத்தளத்தில் பயண நெறிமுறைகளை புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!