அமீரக சட்டங்கள்

UAE: அக்டோபரில் அமலுக்கு வந்துள்ள புதிய விசா நடைமுறைகள் பற்றிய ஒரு பார்வை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்வதற்கு அல்லது தொழில் சம்பந்தமாக அமீரகத்திற்கு வருபவர்கள் என ஏதாவது காரணத்துக்காக அமீரகம் வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விசா நடைமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட விசா அமைப்பை தற்பொழுது அமீரக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

அதிலும் வேலைக்காகவும், வருமானத்துக்காகவும் அமீரகம் வந்து தங்கியிருக்கும் பலருக்கும் இது நன்மை பயக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் விசா அமைப்புகளில், அதிக மாற்றங்களை கொண்டு வரவிருப்பதாக அமீரக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதே போல் ஒவ்வொரு கட்டமாக அரசானது அதனை செயல்படுத்திக் கொண்டும் வருகிறது.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக, இன்னும் சில புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள், அக்டோபர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர போவதாக, கடந்த செப்டம்பர் மாசம் 5 ம் தேதி, ICP என கூறப்படும், அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட விசா நடைமுறைகளில் அப்படி என்ன புதிதாக உள்ளது மற்றும் அதன் முழு விபரங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

கிரீன் விசா

பொதுவாகவே அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு நிறுவனத்தின் மூலமாக தான், வெளிநாட்டவர்கள் அமீரகத்தின் விசாவை பெற முடியும். அவ்வாறு விசா வாங்கிய பின்னர்தான், அவர் தனது குடும்பத்திற்கு விசா ஸ்பான்சர் செய்யவும் முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்பொழுது சொந்தமாவே விசா ஸ்பான்சர் செய்ய கூடிய வகையில, கிரீன் விசா என்ற ஒரு புதிய விசா நடைமுறைக்கு வர உள்ளது.

அமீரகத்தில் ஏற்கனவே இருக்கும் இரண்டு வருட, மூன்று வருட ரெசிடெண்ட் விசாக்கு பதிலாக, ஐந்து வருட விசாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விசாக்கு ஸ்பான்சரும் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. கிரீன் விசா வைத்திருப்பவர்கள்  சொந்த ஸ்பான்சர்ஷிப்பில் அமீரகத்தில் தங்க அனுமதி அளிக்கப்படுவதோடு கூடவே அவர்களின் மனைவி, குழந்தைகளுக்கும் விசா ஸ்பான்சர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரீன் விசா பெறுவதற்கு, அமீரகத்தில் வேலை பார்ப்பவர்களில் மிகவும் திறமையானவர்கள், சொந்தமாக தொழில் புரிபவர்கள் மற்றும் அமீரகத்தில் இன்வெஸ்ட்மெண்ட் செய்தவர்கள் என இவர்களெல்லாம் கிரீன் விசாவிறரகு விண்ணப்பிக்கலாம் என ICP கூறியுள்ளது.

விசிட் விசாக்களில் புதிய மாற்றங்கள்

வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வருவதற்கு விசிட் விசா அல்லது என்ட்ரி பெர்மிட் கண்டிப்பாக தேவைப்படும். தற்பொழுது அதிலும் சில மாற்றங்களை அமீரக அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது, இந்த வகைகளின் கீழ் புது விசாக்கள் அக்டோபர் மாதத்தில் இருந்து அறிமுகம் ஆகியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று Job Exploration Visa ஆகும்.

இதன்படி அமீரகத்திற்கு இனி வேலை தேடி வரும் நபர்கள் விசிட் விசாவில் வர வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக, வேலை தேடி வருபவர்களுக்காகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த விசாவில் அமீரகத்திற்கு வந்து வேலை தேடிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கென சில குறிப்பிட்ட நிபந்தனைகளையும் அரசு நிர்ணயித்துள்ளது.

இதே போல், பிசினஸ் விசா, தற்காலிக வேலை விசா (Temporary Work Visa), இன்வெஸ்டர் விசா, ஃபேமிலி அண்ட் ஃபிரண்ட்ஸ் விசிட்டிங் விசா என இன்னும் சில புது விசாக்களும் நடைமுறைக்கு வரவுள்ளது. அதே போல், இவ்வளவு நாட்களாக 6 மாதமாக இருந்த என்ட்ரி பெர்மிட் விசா செல்லுபடி காலம், இனிமேல் ஒரு வருடத்திற்கு செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கோல்டன் விசாக்களினால் கிடைக்கும் புதிய பலன்கள்

புதிய விசா நடைமுறைகளில் வந்திருக்கும் அடுத்த மாற்றமாக அமீரகத்தின் கோல்டன் விசா வைத்திருக்கும் நபர்கள், அமீரகத்தை விட்டு 6 மாதங்களுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்தாலும், அவர்களின் விசா கேன்சல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதங்கள் கழித்தும் அவர்கள் அமீரகம் வந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் வயது வரம்பு இல்லாமல் தங்களின் பிள்ளைகளுக்கு ஸ்பான்சர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபேமிலி ஸ்பான்சர்ஷிப்

மேலும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் நபர்கள் தங்களின் மகன்களுக்கு 25 வயது வரைக்கும் ஸ்பான்சர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்  முந்தைய நடைமுறைகளில் 18 வயது வரை மட்டும்தான் மகன்களுக்கு பெற்றோர் ஸ்பான்சர் செய்ய வேண்டும் என விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பெற்றோர் தங்களின் மகள்களுக்கு வயது வரம்பில்லாமல் திருமணம் ஆகாத வரையிலும் ஸ்பான்சர் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேன்சல் அல்லது செல்லபடி காலம் முடிந்த விசாக்களில் சலுகை காலம் நீட்டிப்பு

இவற்றுடன் சேர்த்து, வேலையை விட்டு செய்தவர்கள் அல்லது ரெசிடெண்ட் விசா செல்லுபடி காலம் முடிந்தவர்கள், இனி ஒரு மாதத்திற்குள்ளேயே அமீரகத்தை விட்டு வெளியாகி விட வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் அதற்கு பதிலாக அவர்களுக்கு  6 மாத GRACE PERIOD என்று சொல்லக்கூடிய சலுகை காலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நடைமுறை அனைவருக்கும் பொருந்துமா அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தானா என்பது போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!