அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

இந்தியர்கள் துபாய் விசா புதுப்பிப்பது எப்படி..? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும்..!

இந்தியர்கள் அதிகம் வாழும் நாடாக அமீரகம் திகழ்ந்து வருகிறது. வேலைக்கும் சரி, சுற்றுலாவுக்கும் சரி, இந்தியர்கள் செல்லும் ஒரு நாடு என்றால் அது அமீரகம் தான். அதிலும் துபாய் தான் இந்தியர்களை பெரிதும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.

துபாய்க்கு பெரும்பாலான மக்கள் செல்வது விசிட் (சுற்றுலா) விசாவில் தான். துபாய் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்றாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களின் பட்டியல்:

  1. அபுதாபி
  2. அஜ்மான்
  3. துபாய்
  4. ஷார்ஜா
  5. ஃபுஜைரா
  6. ராஸ் அல் கைமா
  7. உம் அல் குவைன்
இந்தியர்கள் அமீரகத்திற்கான சுற்றுலா விசா குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை:

துபாய்க்கு செல்ல சுற்றுலா விசா தேவைப்படும். துபாய் போன்ற பிரபலமான விடுமுறை இடத்தைப் பார்க்க ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சுற்றுலா விசா செல்லுபடியாகும். துபாய் விசாவிற்கு விண்ணப்பித்து 3 வேலை நாட்களில் விசாவை பெறலாம்.

இந்தியர்களுக்கான துபாய் விசா:

வேலை தேடி, ஓய்வு நேரங்களுக்காக, விடுமுறை நாட்களில் அமீரகம் செல்ல விரும்பும் மக்களுக்கு அமீரகத்தின் சுற்றுலா விசா வழங்கப்படுகிறது.

விசா வகைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

14 நாள் எக்ஸ்பிரஸ் சுற்றுலா விசா: 

அவசர காலங்களில் 48 மணிநேர விசா தேவைப்படுவோர் 14 நாட்கள் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

செல்லுபடியாகும் காலம்: விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

30 நாட்கள் சுற்றுலா விசா:

அமீரகத்தில் ஒரு மாத காலம் இருக்க விரும்புவோர் 30 நட்கள் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

செல்லுபடியாகும் காலம்: விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

90 நாட்கள் சுற்றுலா விசா:

அமீரகத்தில் ஒரு மாத காலத்துக்கு மேல் இருக்க விரும்புவோர் 90 நாட்களுக்கு நீண்ட விசாவை பெற்றுக்கொள்ளலாம்.

செல்லுபடியாகும் காலம்: விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அமீரகத்திற்கு சுற்றுலா விசா எங்கு விண்ணப்பிப்பது?

டிராவல்ஸ் ஏஜென்ஸி மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ விசா மையங்களிலோ விசா விண்ணப்பித்து கொள்ளலாம். இல்லாவிட்டால் துபாயில் தெரிந்தவர்களிடத்தில் உங்களது அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் போன்ற அரசு நகல்களை அனுப்பி அங்கு விசாவை விண்ணப்பித்துக் கொள்ளலாம். விசா விண்ணப்பித்துவிட்டால் 3 வேலை நாட்களில் கிடைத்துவிடும்.

விசா விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்.
  • வெள்ளை பின்னணி கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

துபாயில் சுற்றுலா விசாவில் காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது?

  • விசாவில் நிர்ணயிக்கப்பட்ட நாட்கள் முடிவடைவதற்குள் விசாவை மீண்டும் அமீரகத்தில் இருந்துகொண்டே புதுபித்துக்கொள்ளலாம். முன்பு விசா விண்ணப்பித்த அலுவலகத்திலேயே விசாக்களையும் புதுபித்துக்கொள்ளலாம். (அதற்கான ஆவணங்கள்: பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல். வெள்ளை பின்னணி கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் காலாவதியாக இருக்கும் விசா நகல்)
  • விசாவில் நிர்ணயிக்கப்பட்ட நாட்கள் முடிவடைவதற்குள் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட்டு  2 ஆண்டுகளுக்கு அமீரகத்திற்கு பயணிக்க முடியதவாறு அமீரக அரசால் பிளாக் மார்க் அச்சு அடிக்கப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!