அமீரக செய்திகள்

இஸ்லாமியப் புத்தாண்டு விடுமுறைக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய், அபுதாபி மற்றும் ஷர்ஜா…!!

அமீரகத்தில் இஸ்லாமியப் புத்தாண்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமீரக குடியிருப்பாளர்கள் இந்த இலவச பார்க்கிங்கை அணுகுவதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அபுதாபி:

அபுதாபியில் ஹிஜ்ரி புத்தாண்டின் காரணமாக, வாகன ஓட்டிகள் நாளை (ஜூலை 21, வெள்ளிக்கிழமை) அன்று இலவச பார்க்கிங்கை அணுகலாம் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது. இதில் Musaffah M-18 டிரக் பார்க்கிங் லாட் பகுதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், ரெசிடென்ஷியல் பார்க்கிங் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுமாறும் ITC நினைவூட்டியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை ரெசிடென்ஷியல் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல, டார்ப் சாலை சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் கார்களுக்கும் ஜூலை 21 வெள்ளிக்கிழமை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITC கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்:

அபுதாபியின் வாடிக்கையாளர் சேவை மையங்களும் நாளை மூடப்பட்டு மீண்டும் எதிர்வரும் ஜூலை 22, சனிக்கிழமையன்று இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதன் இணையதளம் – https://itc.gov.ae/, ‘Darb’ ஆப், வாடிக்கையாளர் ஆதரவு எண் 800 850 மற்றும் அபுதாபி டாக்சி சேவை எண் – 600 535353 ஆகியவற்றின் மூலம் ITC ஐத் தொடர்பு கொள்ளுமாறு ஆணையம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

துபாய்:

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), நாளை (ஜூலை 21) அன்று துபாயில் உள்ள பொது பார்க்கிங் இலவசம் என்று அறிவித்துள்ளது. ஆனால், இது மல்டி ஸ்டோரி கார் பார்க்கிங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா:

ஷார்ஜா குடியிருப்பாளர்கள் ஹிஜ்ரி புத்தாண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறையான இன்று (ஜூலை 20 வியாழன்) இலவச பொது பார்க்கிங்கை அனுபவிக்கலாம் என்று ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு என்பது ஏரு நாட்கள் கட்டண பார்க்கிங் மண்டலங்களுக்கு பொருந்தாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. இவற்றை நீல நிற பார்க்கிங் தகவல் பலகைகளால் அடையாளம் காணமுடியும்.

ஆகவே, விடுமுறை நாட்களில் அபராதத் தொகையை தவிர்க்க, பார்க்கிங் பகுதிகளை உன்னிப்பாக கவனித்து பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளை முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!